பிளக்ஸ் பேனர் அகற்றுவதில் அதிமுக - திமுக தகராறு... கோஷ்டி மோதலால் பறிபோன உயிர்.! - Seithipunal
Seithipunal


கரூர் மாவட்டத்தில் உள்ள மாவடி அம்மன் கோவில் தெரு பகுதியில், நேற்று முன்தினம் இரவு விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று முடிந்துள்ளது.. இதனால் அங்கு வைக்கப்பட்டு இருந்த பேனர்களை திமுகவினர் மற்றும் அதிமுகவினர் அகற்றியுள்ளனர். 

இதன்போது திமுக மற்றும் அதிமுகவினர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில், திமுகவை சேர்ந்த பிரபாகரன் மற்றும் அவரின் மகன் விக்னேஷ் இருவரும் காயமடைந்துள்ளனர். பிரபாகரனுக்கு தற்போது 55 வயதாகும் நிலையில், அவர் வீட்டிற்குச் சென்ற நேரத்தில் நெஞ்சுவலி ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து கரூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக பிரபாகரனின் உடல் கொண்டு செல்லப்பட்டது. 

இதுகுறித்து கரூர் நகர காவல் துறையினர் இருதரப்பு மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், நேற்று மதியம் ஒரு மணி அளவில் திமுகவினர் மற்றும் பிரபாகரன் உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், இது குறித்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக காவல் அதிகாரிகள் தெரிவித்ததின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.  

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Karur ADMK - DMK Fight Accidental Natural Murder Police Investigation


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->