வெளி உலகத்துக்கு ஜெயில்.. கைதிகளுக்கு?.. சகல வசதிகளும் கட்டுக்கட்டாக தாண்டவமாடும் பரப்பன அக்ராஹாரம்.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் பரப்பன அஹ்ரகார சிறையில் இருக்கும் கைதிகள் சட்டவிரோதமாக செல்போன், கஞ்சா, சிகிரெட் போன்றவை பயன்படுத்துவதாக புகார்கள் தொடர்ந்து எழுந்து வருகிறது. மேலும், அம்மாநிலத்தில் உள்ள சிறைகளில் அவ்வப்போது சோதனை செய்யும் அதிகாரிகள் கைதிகளிடம் இருந்து செல்போன், சிம் கார்டுகள், சிகிரெட், கஞ்சா போன்ற பொருட்களையும் கைப்பற்றி வருகின்றனர். 

மேலும், ஊழல் வழக்கில் குற்றம் நிரூபணம் செய்யப்பட்டு பெங்களூர் பரப்பன அஹ்ரகார சிறையில் 4 வருடம் அடைக்கப்பட்டு இருந்த சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருப்பதாக ஐ.பி.எஸ் அதிகாரி ரூபா பரபரப்பு குற்றம் சுமத்தியிருந்தார். மேலும், சிறைத்துறை முன்னாள் கூடுதல் டி.ஜி.பி சத்ய நாராயணா ரூ.2 கோடி இலஞ்சம் வாங்கியதாகவும் குற்றசாட்டு எழுந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பரப்பன அஹ்ரகார சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளில் பெரும்பாலானோர் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக வீடியோ காட்சிகள் வெளியாகி வரும் நிலையில், சிறையில் உள்ள அறையில் தொலைக்காட்சி, மெத்தை, மின்விசிறி, சமையல் செய்து சாப்பிட வசதி என பல விடியோக்கள் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதனைத்தவிர்த்து கைதிகள் செல்போன், சிகிரெட் மற்றும் கஞ்சா புகைக்கும் வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளது. 

இந்த சொகுசு வாழ்க்கை வாழ்வதற்கு சிறை வார்டன்களுக்கு கட்டுக்கட்டாக பணம் கொடுக்கும் விடீயோக்களும், சிறைத்துறை அதிகாரிகளே கைதிகளுடன் சேர்ந்து மது அருந்தி கும்மாளமிடும் வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளது. மேலும், தங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கைதிகளுக்கு அறை கொடுக்காமலும், உணவு கொடுக்காமலும் கொடுமை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. 

இதில், செல்போன் பயன்படுத்த மாத சந்தா போல பணம் வசூல் செய்யும் நடவடிக்கையும் நடைபெற்று வருகிறது என்றும், சிறையில் உள்ள கைதிகள் தங்களின் அறைகளிலேயே சமைத்து சாப்பிட்டு வருவதகவும், சமையலுக்கு தேவையான பொருட்களை 3 மடங்கு அதிக விலை கொடுத்து வாங்கி வசதியான வாழ்க்கையை சிறைக்குள் வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது. உள்ளூர் ரௌடிகள் முதல் வெளியூர் ரௌடிகள் வரை எனவும், கட்சி பிரமுகர்கள் உள்ளிட்ட சிறையில் இருக்கும் யார் பணம் கொடுத்தாலும் அவர்களுக்கு தேவையானதை செய்யவே வார்டன்கள் தயாராக இருப்பதாகவும் தெரியவருகிறது. இது குறித்து விசாரணை செய்ய வேண்டும் என்று அம்மாநில அரசியல் கட்சிகள் அரசிடம் கோரிக்கை வைத்தவண்ணம் உள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka Bangalore Parappana Agrahara Central Prisoners Live Like Lodge with all Accessories


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->