காரிமங்கலம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா..திரளான பக்தர்கள் தரிசனம்!
Karimangalam Mariamman Temple Kumbhabhishekam festival a large number of devotees gathered for darshan
காரிமங்கலம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே கயிறுகாரன் கொட்டாய் பகுதியில் செல்வ விநாயகர், ஜடை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.முன்னதாக கணபதி ஹோமம், கணபதி பூஜையுடன் தொடங்கியது.அதனை தொடர்ந்து முதல் கால யாக பூஜை, அஷ்ட பந்தன மருந்து சாற்றுதல் ஆகியவை நடைபெற்றது.
நேற்று காலை விக்னேஸ்வர பூஜை, 2-ம் காலயாக பூஜை, மகா பூர்ணா ஹுதி ஆகியவை நடந்தததை தொடர்ந்து இன்று விநாயகர், ஜடை மாரியம்மன் கோவில் மூலஸ்தான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் நடந்தது.சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
திருப்பூர் சுப்பிரமணிய சிவாச்சாரியார் தலைமையில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபி ஷேகத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து அம்மனுக்கு மகா அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது.விழாவில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
இன்று முதல் மண்டல பூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை கோவுல் தர்மகர்த்தாக்கள், நிர்வாகக் கமிட்டியினர் மற்றும் விழா குழுவினர் செய்துள்ளனர்.
English Summary
Karimangalam Mariamman Temple Kumbhabhishekam festival a large number of devotees gathered for darshan