‘கர்தவ்ய த்வார்’ சர்ச்சை: தெற்கு ரெயில்வே மீது சு. வெங்கடேசன் கடும் எதிர்ப்பு...!
Kardavya Dwar controversy S Venkatesan strongly opposes Southern Railway
சு. வெங்கடேசன், மதுரை பாராளுமன்ற உறுப்பினர், தனது எக்ஸ் தளப் பதிவின் மூலம் மொழி தொடர்பான சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
அவர் குறிப்பிட்டதாவது, திருச்சியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட மண்டல ரெயில்வே அலுவலகத்தின் நுழைவு வாயிலுக்கு தெற்கு ரெயில்வே “கர்தவ்ய த்வார்” என்ற இந்தி பெயரை சூட்டியுள்ளது.

“கர்தவ்ய த்வார்” என்பதற்கு தமிழில் “கடமையின் நுழைவுவாயில்” என்று பொருள் எனவும் அவர் விளக்கியுள்ளார்.
ஆனால், இது தேவையற்ற இந்தி திணிப்பின் மற்றொரு உதாரணம் என்றும், பாரதீய ஜனதா கட்சி அரசின் தற்போதைய ஒரே ‘கடமை’ இந்தி மொழியை திணிப்பதே போல தெரிகிறது என்றும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும், உடனடியாக அந்த இந்தி பெயரை நீக்கி, தமிழுக்கு மரியாதை அளிக்கும் வகையில் தமிழில் பெயர் மாற்ற வேண்டும் என தெற்கு ரெயில்வேக்கு வலியுறுத்தியுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் பரவலாக விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Kardavya Dwar controversy S Venkatesan strongly opposes Southern Railway