மாணவிகளின் தாயரை நெருங்கிய கராத்தே மாஸ்டர்...! ஆசை வார்த்தைகளால் மயக்கி கைது...! பின்னணி என்ன ...? - Seithipunal
Seithipunal


நெல்லை மாவட்டம் நரசிங்க நல்லூர் பொன்விழா நகரை சேர்ந்த அப்துல் வகாப் (37) கராத்தே மற்றும் துப்பாக்கி பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். அந்த சுற்றுப்பகுதியில் உள்ள பல மாணவ–மாணவிகள் இவரது பயிற்சியில் கலந்து கொண்டுவருகின்றனர்.

அண்மையில், சுத்தமல்லி பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி இடம் தவறான நோக்கத்தில் பழகி, செல்போன் எண்ணை எடுத்துக் கொள்ளும் புகார்கள் வெளியாகியுள்ளன.இதில் கடந்த 4 வருடம், இவர் பல பெண்களை ஆசை வார்த்தைகள் தெரிவித்து மயக்கி, தனிமையில் பழகியதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும், பாதிக்கப்பட்டவர்களில் சிலர் சமூக பயம் காரணமாக வெளியே பேசாமல் வந்துள்ளனர்.மேலும், சம்பவம் நடந்த சிலநாட்களில், அப்துல் வகாப் சிறுமியின் வீட்டுக்கு சென்று மிரட்டி தாக்கியதாகவும், அங்கு அக்கம் பக்கத்தினர் அவளை காப்பாற்றியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

உடனடியாக சிறுமி சுத்தமல்லி காவலில் புகார் அளித்துள்ளார். இந்த விசாரணையில், அவர் தொடர்ந்து பெண்களை நோட்டமிட்டு, ஆசை வார்த்தைகளால் பலரை ஏமாற்றி வந்தது உறுதிசெய்யப்பட்டது.

அதன் படி, சுத்தமல்லி காவலர்கள் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அப்துல் வகாபை கைது செய்தனர். மேலும் பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக புகாரளித்தால் நடவடிக்கை தொடரும் என காவலர்கள் உறுதியளித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Karate master who close students mother Seduced seductive words and arrested What background


கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?



Advertisement

கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?




Seithipunal
--> -->