வட்டமாக இருந்த வற்றாத கிணற்றை காணவில்லை.. கன்னியாகுமரியில் பகீர்.. அலட்சியத்தில் அதிகாரிகள்.! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மொட்டவிளை கிராமத்தைச் சார்ந்த ஊர் தலைவர் செல்லத்துரை, இரணியல் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். இது தொடர்பான புகாரில், மொட்டவிளை பகுதியில் பஞ்சாயத்து சார்பில் அமைக்கப்பட்ட குடிநீர் கிணறு, நீண்ட காலமாக மக்கள் பயன்பாட்டில் இருந்து வந்தது. 

கடந்த 31ஆம் தேதி 12 ஆவது மாதம் 2020 ஆம் வருடத்திற்கு பின்னர் கிணறை காணவில்லை. சிலர் கிணற்றை மணலால் நிரப்பி, இடத்தை சமதளமாக மாற்றி சொந்த வீட்டுடன் சேர்த்து ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். 

இந்த ஆக்கிரமிப்பு குறித்து கட்டிமாங்காடு ஊராட்சி மன்ற தலைவர், குருந்தன்கோடு கிராம நிர்வாக அலுவலர், கல்குளம் வட்டாட்சியர் ஆகியோரிடம் நேரில் புகார் அளித்தும் எந்தவிதமான பலனும் இல்லை. ஆக்கிரமிப்பு செய்துள்ள நபர்களின் மீது நடவடிக்கை எடுத்து கிணற்றை கண்டறிந்து தர வேண்டும் என்று கூறியுள்ளார். 

மேலும், இதுதொடர்பான புகாரை முதலமைச்சரின் தனிப்பிரிவு அலுவலகத்திற்கும் அனுப்பியுள்ள நிலையில், இந்த புகார் தொடர்பாக குருநந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய வளர்ச்சி அலுவலர் ராஜேஸ்வரி தெரிவிக்கையில், " சம்பந்தப்பட்டவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அளித்துள்ளதாகவும், விசாரணைக்குப் பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் " என்றும் தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanyakumari Well Missing Case Police Investigation


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->