போலீஸ் என்று தெரியாமலேயே விபச்சாரத்துக்கு அழைப்பு.. வடசேரியில் ரெய்டு விட்ட அதிகாரிகள்.! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வடசேரி பேருந்து நிலையத்தில், கடந்த சில வாரங்களாக அதிகளவு குற்ற சம்பவங்கள் நடைபெற்று வந்துள்ளது. திருட்டு தொழில், கஞ்சா விற்பனை, விபச்சாரம், லாட்டரி டிக்கெட் விற்பனை என இருந்துள்ளது. மேலும், காலை நேரத்திலேயே விபச்சாரத்திற்கு அழைப்பு விடும் சம்பவமும் நடைபெற்றுள்ளது. 

இவ்வாறாக குடும்ப விசயமாக வெளியூருக்கு சென்றிருந்த காவல் அதிகாரி, வடசேரி பேருந்து நிலையத்திற்கு வருகை தந்த போது, அதிகாரி என்று தெரியாமல் விபச்சாரத்திற்கு பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனைப்போன்று பிச்சையெடுப்பது போல வெளியூர் பயணிகளிடம் வழிப்பறி போன்ற திருட்டு சமப்வத்தில் ஈடுபடுவதும் தெரியவந்துள்ளது. 

மேலும், பேருந்து நிலையத்தில் பயணிகள் தங்க அமைக்கப்பட்ட இடங்கள் கஞ்சா குடிக்கிகளின் கூடாரமாக இருந்துள்ளது. ஓரினசேர்க்கை கும்பலின் செயல்பாடுகளும் அதிகரிக்கவே, பேருந்து நிலையம் சமூக விரோதிகளின் கூடாரமாக இருந்து வந்துள்ளது. 

இதனையடுத்து, நாகர்கோவில் எஸ்.பி வடசேரி பேருந்து நிலையத்திற்குள் திடீரென வந்து அதிரடி சோதனை மேற்கொண்டனர். அங்குள்ள கேமிராக்கள் கண்காணிப்பையும் தீவிரப்படுத்திய நிலையில், குற்ற சம்பவத்தில் ஈடுபடும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், அலட்சியமாக இருந்தால் துறை ரீதியிலான நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்தார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kanyakumari Nagarcoil Vadasery Bus Stand Prostitution Gang Police Investigation


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->