ஜெயலலிதா ஆட்சி..?! கடுமையாக விமர்சித்த கனிமொழி.! எடப்பாடியில் ஆரம்பித்த ஆட்டம்.!  - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடியில் இலருந்து திமுக மகளிரணி செயலாளரும், பாராளுமன்ற உருப்பினருமான கனிமொழி இன்று பரப்புரையை துவங்கினார்.

இந்த நிலையில் சேலம் கொங்கணாபுரத்தில் மக்கள் மத்தியில் கனிமொழி பேசிய போது, “மறைந்த முதல்வர் ஜெயலலிதா பெயரை சொல்லி நடந்து வரும் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. 

பெண்கல்வி என்பது கேள்விக்குறியாகும் சூழ்நிலை ஏற்பட்டு இருக்கின்றது. மத்திய மாநில அரசுகள் பெண்களுடைய கல்வி சுதந்திரத்தையும் அழிக்க கூடிய செயல்களை தற்போது செய்து வருகின்றன. 

மத்திய அரசு கொண்டு வருகின்ற திட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களாக உள்ளது. ஆனால், அதையும் நம் மாநில முதல்வர் வரவேற்கின்றார்” என்று மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இதற்கு முன்பு, திமுகவின் பிரச்சாரத்தை விமர்சித்த அமைச்சர் ஆர்.பி. உதயகுமார். கனிமொழி எடப்பாடியில் இருந்து மட்டும் இல்லை. விண்வெளிக்கு சென்று பிரச்சாரம் செய்தால் கூட திமுகவை நம்ப மக்கள் தயாரால இல்லை." என்று விமர்சித்து இருந்தது கவனிக்கத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanimozhi speech in edappadi


கருத்துக் கணிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி?!Advertisement

கருத்துக் கணிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி?!
Seithipunal