ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு; அமலாக்கத்துறையின் குற்றபத்திரிக்கையில் சேர்க்கப்பட்டுள்ள ப. சிதம்பரம்..! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சரான ப. சிதம்பரத்திற்கு எதிராக அமலாக்கத்துறை சிறப்பு பண மோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் வழக்குப்பதிவு செய்தது. கடந்த 2018-ஆம் ஆண்டு ஏர்செல்-மேக்சிஸ் வழக்கும்,2020- ஆம் ஆண்டு  ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கும் பதியப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. கடந்த 2024-ஆம் ஆண்டு பிபு பிரசாத் ஆச்சார்யாவுக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கில், PMLA குற்றப்பத்திரிகையில் வழக்கு தொடர கட்டாயம் அனுமதி பெற வேண்டும் என்று உச்சநீதிமன்றம்  உத்தரவிட்டது.

இதனால் PMLA கீழ் வழக்கை சந்தித்த பலர் அமலாக்கத்துறைக்கு எதிராக நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர். இதன்காரணமாக ப.சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு நபர்களுக்கு எதிரான வழக்க விசாரணையில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில் இரண்டு வழக்குகளில் ப.சிதம்பரத்திற்கு எதிராக வழக்கு தொடர அதற்கு உரிய அதிகாரிகளிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. இதனையடுத்து சிதம்பரத்திடம் விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும் என்று அமலாக்கத்துறை சார்பில் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதனால், ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை விசாரணையை தீவிரப்படுத்த வாய்ப்புள்ளது. ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் பெயர் குற்றம் சாட்டப்பட்டவர்களில் 06-வது பெயராக சேர்க்கப்பட்டுள்ளது. ஐஎன்எஸ் மீடியா வழக்கு குற்றபத்திரிக்கையில் முதல் நபராகவும் சேர்க்கப்பட்டுள்ளார்.

 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

P Chidambaram included in the Enforcement Directorates criminal case in the Aircel and Maxis case


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!


செய்திகள்



Seithipunal
--> -->