மீண்டும் வெடித்தது வடகலை, தென்கலை பிரச்சனை - காஞ்சிபுரம் வரதராஜர் கோவிலில் பரபரப்பு.!
kanchipuram varatharajar temple vadakalai thenkalai problam
காஞ்சிபுரம் வரதராஜர் கோவிலில் நீண்டகாலமாக வடகலை மற்றும் தென்கலை உள்ளிட்ட இரு பிரிவுகளைச் சேர்ந்தவர்களிடையே வேதபாராயணம் மற்றும் ஸ்தோத்திர பாடல்கள் பாடுவதில் பிரச்சினை நிலவி வருகிறது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், காஞ்சிபுரம் வரதராஜர் கோவிலில் கடந்த 4 நாட்களாக வைகாசி பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் கோஷ்டி பிரச்சினை நடைபெறக் கூடாது என்பதற்காக இரு பிரிவினருமே வேதபாராயணம் மற்றும் திவ்யபிரபந்தம் பாடக்கூடாது என்று கோவில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இதனை முன்னிட்டு நடைபெறும் விழாக்களில் முக்கிய நிகழ்வாக சுவாமி வரதராஜ பெருமாள் வீதி உலா வந்து கங்கைகொண்டான் மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது மந்திர புஷ்பம் எனப்படும் பாடலை பாடி வழிபாடு செய்வது வழக்கம். அப்போது தென்கலை பிரிவினர் இடையூறு செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற நாக வாகன உலாவின்போது வடகலை மற்றும் தென்கலை பிரிவினருக்கிடையே மீண்டும் பிரச்சினை வெடித்தது. உடனே போலீசார் அங்கே வந்து இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தியதனால் அங்கு சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தினந்தோறும் இத்தகைய பிரச்சினைகள் நடந்து வருவதால், இந்த விவகாரத்தில் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் நீதிமன்றம் தலையிட்டு இதற்கு தீர்வு காண வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
English Summary
kanchipuram varatharajar temple vadakalai thenkalai problam