பெண்போல பேசி காதல்.. ஏமார்ந்த காதலனை ஒதுக்குபுறமாக அழைத்து ஓரின சேர்க்கைக்கு வற்புறுத்தியதால் கொலை.! - Seithipunal
Seithipunal


பெண் குரலில் பேசி காதலிப்பதாக ஏமாற்றிய இளைஞனை நேரில் சந்திக்க சென்று, ஓரினசேர்கைக்கு வற்புறுத்தி இறுதியில் கொலை நடந்த பரபரப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தை சார்ந்தவர் முருகன். இவருக்கு முகநூல் மூலமாக அமுதா என்ற பெண்மணியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, இவர்கள் இருவரும் தங்களின் அலைபேசி எண்களை பரிமாறிக்கொண்டுள்ளனர். 

கடந்த 2 வருடமாக இருவரும் செல்போனிலேயே காதல் பாடங்கள் பயின்று வந்த நிலையில், முருகன் அமுதாவை நேரில் சந்திக்க விருப்பம் தெரிவித்து ஆசை வார்த்தை கூறி இருக்கிறார். காதலனின் விருப்பத்திற்கு சம்மதம் தெரிவித்த அமுதாவும், மதுரைக்கு வரசொல்லியிருக்கிறார். 

மதுரைக்கு வந்த முருகனுக்கு பெரும் அதிர்ச்சியாக, காதலி என்ற பெயரில் பேசிக்கொண்டு இருந்ததாக ஆண் ஒருவர் வந்துள்ளார். பின்னர் இருவரும் பேசலாம் என்று கூறி தூத்துக்குடி எட்டயபுரத்திற்கு சென்றுள்ளனர். 

அமுதா என்ற பெயரில் முகநூலில் அறிமுகமாகி செல்போனில் பேசியவரின் பெயரும் முருகன். இவர் எட்டயபுரம் கிராமத்தை சார்ந்தவர் என்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த காஞ்சிபுரம் முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

எட்டயபுரம் அருகேயுள்ள காட்டுப்பகுதிக்கு காஞ்சிபுரம் முருகனை அழைத்து சென்ற தூத்துக்குடி முருகன், நான் உங்களை மனதார காதலிக்கிறேன், என்னை திருமணம் செய்துகொள்ளுங்கள் என்று வற்புறுத்தியுள்ளான். மேலும், ஓரின சேர்க்கை முயற்சி சம்பவமும் நடந்துள்ளது. 

இதனால் பதறிப்போன காஞ்சிபுரம் முருகன் ஆத்திரத்தில் தூத்துக்குடி முருகனை கொலை செய்து இருக்கிறார். காட்டுப்பகுதியில் பிணம் கிடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் தெரியவந்து, அவர்கள் விசாரணை செய்கையில் காஞ்சிபுரம் முருகன் கைது செய்யப்பட்டு இருக்கிறான். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும், முகமறியா முகநூல் தோழி யார்? என்பதை அறிந்துகொள்ளாமல் காதல் வலையில் விழுந்து, இருக்கும் வேலைகளை விட்டு காதலியை பார்க்க வந்து, அவன் ஆணாக இருந்து திருமணம் செய்ய வற்புறுத்தச்சொல்லி இறுதியில் கொலை நடந்துள்ளது அதிர்வலையை பதிவு செய்துள்ளது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kanchipuram Man Murder Thoothukudi Man Due to Fake Love Issue and Forced Homo Sexual Activity


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->