மஞ்சள் வீரன் டி.டி.எஃப் வாசனுக்கு 15 நாட்கள் சிறை! காஞ்சிபுரம் நீதிமன்றம் அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


மஞ்சள் வீரன் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாக இருந்தவரும் பிரபல யூடியூபருமான டி.டி.எஃப் வாசன் சென்னையில் இருந்து பெங்களூர் நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நாட்களுக்கு முன்பு காஞ்சிபுரம் அடுத்த பாலுச்செட்டி சத்திரம்  அருகே தாமல் எனும் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது வீலிங் செய்ய முயற்சி செய்து உள்ளார். 

அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்த டிடிஎஃப் வாசன் விபத்தில் சிக்கிய நிலையில் அவருக்கு கை முறிவு ஏற்பட்டதால் காஞ்சிபுரம் தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை செல்வதாக கூறி அழைத்துச் செல்லப்பட்டவர் தலைமறைவானார்.

இந்த நிலையில் பாலுச்செட்டி சத்திரம் போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து இன்று காலை அவரை கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து டி.டி.எஃப் வாசனிடம் காஞ்சிபுரம் போலீசார் 2 மணி நேரம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணை முடிவில் அவர் காஞ்சிபுரம் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி அமர்வின் முன்பு ஆஜர் படுத்தப்பட்டார்.

அப்போது டிடிஎஃப் வாசல் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் டிடிஎஃப் வாசன் மட்டுமே இருசக்கர வாகனத்தில் பயணம் செய்ததாகவும், இந்த விபத்தில் யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை எனவும், அவ்வாறு இருக்க போலீசார் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்திருக்கக் கூடாது, எனவே அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிட்டார்.

அதனை ஏற்க மறுத்த நீதிபதி அவர் பலமுறை பொது மக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் வாகனத்தை இயக்கி உள்ளதாகவும், அவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட நீதிபதி டிடிஎஃப் வாசனுக்கு வரும் அக்டோபர் 3ம் தேதி வரை 15 நாட்கள் காஞ்சிபுரம் மாவட்ட சிறையில் அடைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

அப்போது அவரை புழல் சிறையில் அடைக்க வேண்டும் என காவல்துறையினர் வைத்து கோரிக்கையை ஏற்ற நீதிபதி டி.டி.எஃப் வாசனை புழல் சிறையில் அடைக்கவும் அனுமதி வழங்கி மறு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன் மூலம் டி.டி.எஃப் வாசனை புழல் சிறையில் அடைப்பதற்கான பணிகளை போலீசார் முன்னெடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kanchipuram court orders 15 day jail to TTF Vasan


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->