மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற ஆதார் எண் கட்டாயம்.. காஞ்சிபுரம் ஆட்சியர் உத்தரவு..!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசால் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை ரூ. 2,000 தொடர்ந்து பெற தங்கள் ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் "மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் வழியாக மன வளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி, கடுமையான பாதிக்கப்பட்டவர், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோர், தொழு நோயால் பாதிக்கப்பட்டவர் மற்றும் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதாந்திர பராமரிப்பு தொகையானது மாதம்தோறும் ரூ. 2,000 அவர்களது வங்கி சேமிப்பு கணக்கில் செலுத்தப்படுகிறது.

தற்பொழுது பயனாளர்களின் சுய விவரங்களை மருத்துவச் சான்றிதழுடன் கூடிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வங்கிப் புத்தகம் நகல், புகைப்படம் மனவளர்ச்சி குன்றியோர் பெற்றோருடன் இணைந்து எடுத்த புகைப்படம், தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை பெற்றிருப்பின் அதன் நகல் ஆகிய சான்றிதழ்களை அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம் ஆகிறது.

தாங்கள் டிசம்பர் 2022 வரை பராமரிப்பு தொகை பெற்று ஜனவரி 2023 ஆம் மாதம் உதவி தொகை பெறப்படாதவர்கள் மட்டும் பராமரிப்பு உதவி தொகை தொடர்ந்து பெற வேண்டுமாயின் உடனடியாக தங்களின் சான்றிதழ்களில் நகலை இணைத்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் வரும் பிப்ரவரி 17 ஆம் தேதி வெள்ளிக்கிழமைக்குள் சமர்ப்பித்து தங்களுக்கான பராமரிப்பு உதவி தொகையினை பெற்று பயனடுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kanchipuram collector order aadhar mandatory for differentiability


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->