இனி அலைய வேண்டாம்! எப்எஸ்எஸ்ஏஐ விதிகளில் அதிரடி மாற்றம்...! - ‘FSSAI’ உரிமம் வாழ்நாள் முழுவதும் செல்லும்... புதுப்பிக்கத் தேவையில்லை! - Seithipunal
Seithipunal


உணவுத் தொழில் செய்வோருக்கு பெரும் நிம்மதியளிக்கும் வகையில், எப்எஸ்எஸ்ஏஐ (FSSAI) உரிமங்கள் மற்றும் பதிவுச் சான்றிதழ்கள் இனி வாழ்நாள் முழுவதும் செல்லும் என்றும், அவற்றை மீண்டும் புதுப்பிக்கத் தேவையில்லை என்றும் மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

தொழில் செய்வதை எளிதாக்கும் நோக்குடன் கொண்டுவரப்பட்டுள்ள இந்தச் சீர்திருத்தத்தின்படி, ஏப்ரல் 1, 2026 முதல் ஆண்டு வருமானம் 1.5 கோடி ரூபாய் வரை உள்ள நிறுவனங்கள் அடிப்படைப் பதிவு மட்டும் பெற்றால் போதுமானது; இதற்கு முன் இந்த வரம்பு 12 லட்சமாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், 50 கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்டும் நிறுவனங்கள் மாநில உரிமத்தின் கீழும், அதற்கு மேல் வருவாய் உள்ளவை மத்திய உரிமத்தின் கீழும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த மாற்றத்தால் உணவு வணிகர்கள் அடிக்கடி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டிய பணிச்சுமை குறைவதோடு, தரமான உணவு வழங்குவதில் அவர்கள் அதிக கவனம் செலுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், தெருவோர வியாபாரிகளுக்குச் சிறப்புச் சலுகையாக, மாநகராட்சி அல்லது நகர விற்பனைக் குழுக்களிடம் ஏற்கனவே பதிவு செய்துள்ளவர்கள், எப்எஸ்எஸ்ஏஐ-ல் தனியாகப் பதிவு செய்யத் தேவையில்லை என்றும், அவர்கள் தானாகவே பதிவு செய்யப்பட்டவர்களாகக் கருதப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை மாற்றத்தினால் நாடு முழுவதும் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான தெருவோர உணவு வியாபாரிகள் நேரடியாகப் பயனடைய உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Major Changes FSSAI Regulations FSSAI Licenses Now Valid Lifetime No Need Renewal


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->