வெற்றி மாறனுக்கு ஆதரவு தெரிவித்த கமல்ஹாசன்.. ராஜராஜசோழன் காலத்தில் இந்து மதமே கிடையாது.! - Seithipunal
Seithipunal


சமீபத்தில் மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகியது. இந்த படம் வெளியானதிலிருந்து அதில் வரும் கதாபாத்திரங்கள் குறித்து விவாதங்கள் நடந்து வருகின்றன.

இது குறித்து சமீபத்தில் பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் பேசிய கருத்து சர்ச்சையாகி இருக்கிறது.

அதில் அவர், "ராஜராஜ சோழனை இந்து என்று கூறுவது தவறானது. ராஜ ராஜ சோழன் இந்து இல்லை." என்று பேசி இருந்தார். இதை கேட்ட பலரும் அவர் இந்து தான். அதனால் தான் அவர் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலில் கட்டி இருக்கிறார். எப்படி அவரை இன்று இல்லை என்று கூற முடியும் என்று பேசி வருகின்றனர். தற்போது இவருடைய கருத்துக்கு பலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் சென்னையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் சிறப்பு காட்சியை படக்குழுவினருடன் இணைந்து பார்த்துவிட்டு, அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது அவரிடம் வெற்றிமாறன் கூறிய கருத்து குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கமல்ஹாசன், "ராஜராஜசோழன் காலத்தில் இந்து மதம் என்ற பெயர் கிடையாது. சைவம், வைணவம், சமணம் போன்ற சமயங்கள் தான் இருந்தன. தமிழனுக்கு மதமே கிடையாது. இந்து என்பது ஆங்கிலேயர்கள் கொடுத்து விட்டு சென்ற பெயர்.

இங்கு மதங்கள் வெவ்வேறாக இருந்தது. இவையெல்லாம் வரலாற்றில் உள்ளவை. இந்த திரைப்படம் ஒரு வரலாற்றுப் கற்பனை திரைப்படமாகும். இங்கு வரலாற்றை திணிக்க வேண்டாம், மொழி பிரச்சினையை இங்கு கொண்டு வரவும் வேண்டாம். இது நல்ல படம் நமது கலைஞர்களை கொண்டாடுவோம்" என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kamalahasan support to Director Vetrimaran


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->