கோதாவரி... நடிகை கமலா காமேஷ் மறைந்தார்! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் மூத்த குணசித்திர நடிகை கமலா காமேஷ் (வயது 72) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார்.  

தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் அம்மா கதாபாத்திரம் மற்றும் ஜனரஞ்சகமான குண சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் கமலா காமேஷ்.

இயக்குனர் விசு இயக்கத்தில் "சம்சாரம் அது மின்சாரம்" படத்தில் கோதாவரி என்ற பாத்திரம் ரசிகர்களால் என்றும் மறக்க முடியாது.

மேலும்,  "கடலோர கவிதைகள்," "அலைகள் ஓய்வதில்லை" போன்ற படங்களில் அவரின் கதாபாத்திரங்கள் காலம் கண்டத்து என்றும் மக்கள் மனதில் நிற்கும்.

1974-ல் இசையமைப்பாளர் காமேஷை திருமணம் செய்து கொண்ட கமலா காமேஷுக்கு, உமா ரியாஸ் என்ற மகள் உள்ளார்.  

480-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த கமலா காமேஷுக்கு அண்மைக்காலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். 

அவரது மறைவுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kamala Kamesh death


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->