கள்ளச்சாராயம் குடித்து செத்தா 10 லட்சம் தரிங்க, இவருக்கு தரமுடியதா? தமிழக அரசுக்கு குட்டு வைத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை!
Kallasarayam TNgovt Madurai HC Division
கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும் போது, அப்பாவி மனுதாரருக்கு, மகன் இறப்புக்காக 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கக் கூறுவதும், அப்படி இழப்பீடு வழங்கினால் எந்த பாதிப்பும் வராது என்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.

திருச்சி மாவட்டம், மறவனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொசு ஒழிப்பு பணியாளராக பணிபுரிந்து வந்தவர் கலையரசன்.
இவர் கடந்த ஆண்டு பணியின்போது ஏற்பட்ட தீ விபத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில், கலையரசனின் இறப்புக்கு ரூபாய் 25 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவு உத்தரவிட வேண்டும் என்று, அவரின் தந்தை அர்ஜுனன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, "கள்ளச்சாராயம் குடித்து உயிர் இழந்தவர்களுக்கு 10 லட்சம் இழப்பீடு வழங்கும்போது, அப்பாவியின் உயிரிழப்பிற்கு 10 லட்சம் இழப்பீடு வழங்குவதால் எந்த பாதிப்பும் வராது" என்று தமிழக அரசுக்கு தனது கருத்தினை நீதிபதி பதிவு செய்துள்ளார்.

மேலும் இந்த வழக்கு விசாரணையின் முடிவில் மனுதாரருக்கு ரூபாய் 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஏற்கனவே கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் உயிரிழந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவது தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்தும் என்று, சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், நாம் தமிழர் கட்சியின் சீமான், தேசிய முற்போக்கு திராவிட க்ளாக்த்தின் பிரேமலதா விஜயகாந்த் அரசியல் கட்சி தலைவர்களும், சமூக ஆரவாளர்களும், கள்ள சாராயம் குடித்தவர்களுக்கு இழப்பீடு தருவதற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்து, தமிழக அரசு மீது சில விமர்சனங்களையும் முன் வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Kallasarayam TNgovt Madurai HC Division