கள்ளக்குறிச்சி மாணவி மரணத்தில் திடீர் திருப்பம் : 5 உறுப்புகள், ரத்த கறை, உடலில் காயங்கள் - சற்றுமுன் உடற்கூறு ஆய்வில் அதிர்ச்சி தகவல்.! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவி, மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. 

மேலும், மாணவி சாவில் மர்மம் இருப்பதாகப் புகார் தெரிவித்து உறவினர்களும், பொதுமக்களும் கடந்த 3 தினங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளியில் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக, மாணவி இறப்பதற்கு முன் அவரது உடலில் காயங்கள் இருந்ததாக உடற்கூறு ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், மாணவியின் உடைகளிலும் ரத்த கறைகள் இருந்தன என்றும், மாணவியின் இதயம் உள்ளிட்ட 5 உறுப்புகள், தடயவியல் துறை ஆய்விற்காக அனுப்பப்பட்டுள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே, கொலையாளியை கைது செய்யக் கோரி உறவினர்கள், பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் மற்றும் போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

kallakurichi school girl death report info


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->