தமிழகம், கேரளா, கர்நாடகாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: மத்திய அரசு எச்சரிக்கை..!
Central government explains the impact of Corona in Tamil Nadu and Kerala
தென் கிழக்கு ஆசியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. இந்தியாவிலும் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகின்ற நிலையில், இது குறித்து அச்சப்படத் தேவையில்லை என மத்திய, மாநில அரசுகள் கூறி வருகின்றன.
இந்நிலையில், 'தமிழகம், கேரளா, மஹாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களில் மட்டுமே கோவிட் பாதிப்பு பதிவாகிறது,' என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது:- கோவிட் பரவல் அதிகரிப்பு தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஆலோசனை நடத்தியது. இதில் கேரளா, தமிழகம், மஹாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் மட்டும் கோவிட் பாதிப்பு பதிவாகிறது என்று குறிப்பிட்டுள்ளது.
அதிலும், லேசான பாதிப்புடன், வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெறுகின்றனர் எனவும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், கண்காணிப்புடன் இருப்பதுடன், பல்வேறு அமைப்புகள் மூலம் சூழ்நிலையை உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவித்துள்ளது.
English Summary
Central government explains the impact of Corona in Tamil Nadu and Kerala