நீலகிரியில் கனமழை எச்சரிக்கை: சுற்றுலா தளங்களுக்கு மக்கள் செல்ல தடை!
Nilgiri Red Alert
நீலகிரி மாவட்டத்தில் நாளை மறுநாள் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதால், பாதுகாப்பு காரணமாக முக்கிய சுற்றுலா நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
இதற்கமைய, உதகை ஏரியில் நடைபெறும் படகு சவாரி சேவை இரண்டு நாட்களுக்கு நிறுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா அறிவித்துள்ளார். அதேபோல், மூன்று நாட்களுக்கு மலையேற்ற சவாரியும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும், பைன் மரக்காடு, தொட்டபெட்டா உள்ளிட்ட சுற்றுலா பகுதிகள் நாளைய நாளில் மூடப்படவுள்ளதாகவும், சுற்றுலாப்பயணிகள் அப்பகுதிகளுக்கு வராமல் இருக்கும்படியும் மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதேபோல், கனமழையின்போது மின்கம்பங்கள், மரங்கள் ஆகியவற்றின் அருகே பொதுமக்கள் நின்று கொள்ள வேண்டாம் எனவும், பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்குமாறும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.