மணலூர்பேட்டை: வனப்பகுதியில் எரிந்த நிலையில் பெண்ணின் பிணம்... பாலியல் பலாத்கார கொலையா? காவல்துறை விசாரணை.! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் மணலூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமம் கொழுந்தராம்பட்டு. இந்த கிராமத்தின் காந்திநகர் வனப்பகுதியில் இளம்பெண் ஒருவர் பிணமாக கிடந்துள்ளார். 

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி, மணலூர்பேட்டை காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர், பெண்ணின் உடலை ஆய்வு செய்தனர். 

இதன்போது, பெண் எரித்துக்கொலை செய்யப்பட்டது உறுதியான நிலையில், அவருக்கு 30 வயது இருக்கலாம் என முடிவு செய்தனர். பின்னர், பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு, இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள தொடங்கியுள்ளனர். 

எரித்துக்கொலை செய்யப்பட்ட பெண் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டாரா? அல்லது கள்ளக்காதல் விவகாரத்தில் அரங்கேறிய கொலையா? திருட்டு செயலில் ஈடுபடும் நபர்களின் கொடூரமா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kallakurichi Manalurpettai Woman Murder and Burned Body Recover By Police 15 July 2021


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->