மருந்துகளும் இல்லை.. உபகரணங்களும் இல்லை - கள்ளக்குறிச்சி மருத்துவமனை விளக்கம்.!  - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷ சாராயம் குடித்ததில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதிய மருந்துகளும், மருத்துவ சாதனங்களும் இல்லாத நிலை உருவாகியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸும் முன்வைத்திருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவமனை தரப்பில் கூறியதாவது-

”மெத்தனால் கலந்த சாராயத்தை அருந்தியவர்களுக்கு அதை முறிக்க மாற்று மருந்து கொடுக்க வேண்டும். மெத்தனால் உடலில் மாற்றத்தை ஏற்படுத்தி நச்சுத்தன்மையாக மாறுவதை இந்த மருந்து தடுக்கும். ஆனால், அந்த மருந்து இங்கு இருப்பில் இல்லை. மரக்காணம் சம்பவம் நடந்தபோது, அரசு இந்த மருந்தை வாங்கி கையிருப்பில் வைத்திருக்கும். ஆனால், தற்போது வரை அந்த மருந்து கையிருப்பில் இல்லாததால் சிகிச்சைக்கு வந்தோருக்கு கொடுக்க முடியவில்லை.

தற்போது 50 பேருக்கு மேல் மெத்தனால் சாராயத்தால் இறந்துள்ளனர். சுமார் ரூ.50 லட்சம் செலவழித்து மாற்று மருந்தை வாங்கியிருந்தால், அதை பயன்படுத்தி இருக்கலாம். இனியாவது அரசு அந்த மருந்தை வாங்கி கொடுப்பது அவசியம்.

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதிய மருத்துவ உபகரணங்களும், நெஃப்ராலஜி எனும் சிறப்பு சிறுநீரக மருத்துவரும் இல்லாததால் பலர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர், சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பட்டனர். அதில், பலர் உயிரிழந்துள்ளனர்" என்றுத் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உயர் அதிகாரிகள் தெரிவிக்கையில், ”கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி திறந்து 2 ஆண்டுகளே ஆகிறது. 5 ஆண்டுகள் ஆன பின்னர் தான் ஹீமோ டயாலிஸ் இயந்திரமும், நெஃப்ராலஜிக்கான சிறப்பு சிறுநீரக மருத்துவப் பேராசிரியரும் நியமிக்கப்படுவர். அதனால் தான், தற்போது பாதிக்கப்பட்ட பலர் ஜிப்மர் உள்ளிட்ட வேறு மாவட்ட மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்” என்று விளக்கம் அளித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kallakurichi hospital explain no medicines in hospitals


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?



Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?




Seithipunal
--> -->