நடிகர் ஜீவா கார் விபத்து! இருசக்கர வாகன ஒட்டுநர் மீது வழக்குபதிவு! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே நடிகர் ஜீவா ஓட்டிச் சென்ற காரின் குறுக்கே வந்து விபத்தை ஏற்படுத்திய மணிகண்டன் என்பவர் மீது, ஜீவா அளித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே நடிகர் ஜீவா சென்ற கார் நேற்று விபத்துக்குள்ளானது.

சின்னசேலம் தேசிய நெடுஞ்சாலையின் நடுவே உள்ள தடுப்பு கட்டையில் மோதி கார் விபத்துக்குள்ளனது. இதில் நடிகர் ஜீவாவுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

சேலத்திலிருந்து கள்ளக்குறிச்சி நோக்கி தனது குடும்பத்தினருடன் நடிகர் ஜீவா சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டதாகவும் தெரியவந்தது. 

மணிகண்டன் என்பவர் ஓடிவந்த இருசக்கர வாகனம் திடீரென சாலையின் குறுக்கே வந்ததால், விபத்தை தவிர்க்க முயன்ற போது, சாலையின் நடுவே உள்ள தடுப்பு கட்டையில் மோதி கார் விபத்துக்குள்ளாகியுள்ளது. 

சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், நடிகர் ஜீவா ளித்த புகாரின் பேரில், இருசக்கர வாகன ஓட்டி மணிகண்டன் என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kallakurichi Actor Jeeva Car Accident police case file


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->