''உருவ பொம்மையை எரிப்பது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகாது''; உயர்நீதிமன்ற கிளை..! - Seithipunal
Seithipunal


வெறும் உருவ பொம்மையை எரிப்பது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகாது என்று உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

திருச்சி மாவட்ட தமுமுக மாவட்ட பொருளாளர் ராஜா, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுருந்ததாவது;

''காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்தும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து தமிழகத்திற்கு உரிய காவிரி நீர் வழங்கக் கோரி கடந்த 2018-இல் திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் போராட்டம் நடத்தப்பட்டது.

இப்போராட்டத்தால் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இருப்பினும் நான் உட்பட 07 பேர் மீது திருச்சி கண்டோன்மென்ட் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்.'' என்று குறிப்பிட்டு இருந்தார்.

குறித்த மனு நீதிபதி ஆர்.விஜயகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், ஜனநாயக அடிப்படையில் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தப்பட்டது. ஆனால், கடுமையான சட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், அடிப்படை உரிமைகளுக்கு போராடும் மக்கள் மீது இது போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யக்கூடாது என ஏற்கனவே பல்வேறு உத்தரவுகள் உள்ளன எனவும் கூறப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, அரசு தரப்பில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக உருவ பொம்மைகள் எரித்து ஆர்ப்பாட்டம் செய்ததால், வழக்கை ரத்து செய்யக் கூடாது எனக் கூறப்பட்டது.

இரு தரப்புவாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் சாட்சிகள் அனைவரும் காவல் துறை அதிகாரிகளாக உள்ளனர். பொதுமக்கள் யாரும் சாட்சியாகக் காட்டப்படவில்லை என்று சுட்டிக்காட்டியதோடு, மனுதாரர்கள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினர் என்றோ அல்லது பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தனர் என்றோ எந்த ஒரு குற்றச்சாட்டும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார் 

அத்துடன், இது ஒரு ஜனநாயக முறையிலான போராட்டமாகும். வெறும் உருவ பொம்மையை எரிப்பது மட்டுமே இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகாது என்று தெரிவித்துள்ளார்.

 ஆகவே, மனுதாரர்களுக்கு எதிரான குற்றவியல் நடவடிக்கைகளைத் தொடர்வது சட்டத்தின் செயல்முறையைத் துஷ்பிரயோகம் செய்வதற்கு மட்டுமே வழிவகுக்கும் என்று கூறி, வழக்கை ரத்து செய்து  உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The High Court states that burning an effigy is not a punishable offense under the Indian Penal Code


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->