கலைஞர் இருந்திருந்தா நான் ஏன் பேசப்போறன்... சென்னையில் நடிகர் பிரகாஷ்ராஜ் பரபரப்பு பேட்டி!
Kalaingar 100 PrakashRaj press meet
"கலைஞர் இருந்திருந்தால் நான் பேச வேண்டிய அவசியமே இல்லை" என்று நடிகரும் பாஜகவின் தீவிர எதிர்ப்பாளருமான பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியை இன்று நடிகர் பிரகாஷ்ராஜ் திறந்து வைத்துதார்.
பின்னர் அமைச்சர் சேகர்பாபு உடன் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்தாவது, "கலைஞர் இருந்திருந்தால் நான் பேச வேண்டிய அவசியமே இல்லை.

கலைஞர் இருக்கும் வரை எவரும் வாலாட்ட முடியவில்லை. என்னிடம் ஒரு ஐஏஎஸ் அதிகாரி சொன்னார், கலைஞர் இல்லை என்றால் நான் ஐஏஎஸ் அதிகாரி ஆகியிருக்க முடியாது என்றார்.
சாதியை வைத்தோ, பணத்தை வைத்தோ அரசியல் செய்வது வேறு. ஆனால் கலைஞர் கொள்கையை வைத்து அரசியல் செய்தவர். கலைஞர் இருந்தார் என்ற செய்தியை விட அவர் ஏன் கலைஞர் ஆனார் என்ற செய்திதான் முக்கியம்.
பாஜக தோற்பதற்கான எல்லா வேலைகளையும் பிரதமர் நரேந்திர மோடி செய்துவிட்டார். ஜூன் 4-ம் தேதிக்கு பிறகு பிரதமர் மோடி சும்மாதான் இருப்பார்" என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்,
English Summary
Kalaingar 100 PrakashRaj press meet