பள்ளிகள் திறக்கும் மறுநாளே கொடுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் தமிழக அரசு!
Kalai unavu thittam 3 june 2025 TNGovt
தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்துக்காக 2022 செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்ட காலை உணவுத் திட்டம், தொடக்கத்தில் அரசு பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு அமல்படுத்தப்பட்டது.
பின்னர், இந்த திட்டம் ஊரக பகுதிகளில் செயல்படும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. தற்போது, மாநிலத்திலுள்ள 30,992 அரசு பள்ளிகள் மற்றும் 3,995 ஊரக அரசு உதவி பெறும் பள்ளிகளில் செயல்பட்டு, மொத்தம் 17.53 லட்சம் மாணவர்களுக்கு பயனளித்து வருகிறது.
2024–25ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், இந்த திட்டம் நகர்ப்புற அரசு நிதியுதவி பெறும் 1,545 பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன் மூலம், நகரங்களில் உள்ள 1.14 லட்சம் மாணவர்கள் நன்மை பெறவுள்ளனர். இந்த திட்டத்திற்காக ரூ.600 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
புதிதாக இணைக்கப்படும் பள்ளிகளில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3ஆம் தேதியிலிருந்து காலை உணவுத் திட்டம் தொடங்கும் என திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கல்வித் துறை அதிகாரிகள் தீவிரமாக செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
Kalai unavu thittam 3 june 2025 TNGovt