கச்சத்தீவை மீட்க வேண்டும்..பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் மீண்டும் கடிதம்!
Kachchatheevu must be recovered Chief Minister MK Stalin writes another letter to Prime Minister Modi
இலங்கை பிரதமர் இந்தியாவிற்கு வருகை தந்துள்ள நிலையில், கச்சத்தீவை மீட்பது குறித்து பேச வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில்,இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து நடைபெறும் தாக்குதல்கள், துன்புறுத்தல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் காரணமாக தமிழக மீனவ சமூகங்கள் தொடர்ந்து துன்பங்களை எதிர்கொள்கின்றனர். கச்சத்தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதியில் மீன்பிடித்து வருகின்றனர். இந்தத் தீவு மத்திய அரசால் மாநில அரசின் முறையான ஒப்புதலைப் பெறாமல் இலங்கைக்கு மாற்றப்பட்டது. இந்த முடிவை 1974 முதல் தமிழ்நாடு சட்டமன்றம் தொடர்ந்து எதிர்த்து வருகிறது.
இலங்கை கடற்படையினரால் மீனவர்களும் மீன்பிடி படகுகளும் தொடர்ந்து சிறைபிடிக்கப்படுவது,2021 முதல் 1,482 மீனவர்களும் 198 படகுகளும் கைதானது,
தற்போது 76 மீனவர்களும் 242 படகுகளும் இலங்கை வசம் உள்ளன என கூறப்பட்டுள்ளது.இரு நாடுகளைச் சேர்ந்த மீனவர்களின் கவலைகளை, நிலையான மற்றும் ஒருங்கிணைந்த முறையில் நிவர்த்தி செய்வதற்கான ஒரு கட்டமைக்கப்பட்ட தளத்தை உருவாக்க இந்த வழிமுறையை மீண்டும் புதுப்பிப்பது அவசியமாகும் என்றும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
முதல்வர், “கச்சத்தீவு மத்திய அரசின் ஒப்புதலின்றி இலங்கைக்கு ஒப்படைக்கப்பட்டது. இதனால் தமிழக மீனவர்கள் பாரம்பரிய மீன்பிடி உரிமையை இழந்துள்ளனர். இதை மீட்டெடுப்பது அவசியம்,” எனக் கூறியுள்ளார்.
மேலும், மீனவர்களின் பிரச்சனைகளை தீர்க்க இந்தியா–இலங்கை கூட்டுப் பணிக்குழுவை மீண்டும் செயல்படுத்தவும், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்கவும் வலியுறுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
English Summary
Kachchatheevu must be recovered Chief Minister MK Stalin writes another letter to Prime Minister Modi