ஜூன் 3 கலைஞர் பிறந்தநாள் இனி செம்மொழி நாள் சட்டசபையில் அறிவித்த அமைச்சர் சாமிநாதன்!
June 3 will be Semmozhi Day Minister Saminathan
வரும் 2025 ஆம் ஆண்டு முதல் ஜூன் மூன்றாம் தேதி செம்மொழி நாளாக கொண்டாடப்படும் என அமைச்சர் சாமிநாதன் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பல்வேறு துறைகள் மீதான மானிய கோரிக்கைகள் விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தில் போது பேசிய தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்திருப்பதாவது,
2025 ஆம் ஆண்டு முதல் ஜனவரி 25ஆம் தேதி தமிழ்மொழி தியாகிகள் நாளாக கடைப்பிடித்து சென்னையில் உள்ள நினைவகங்களில் வீரவணக்கம் செலுத்தப்படும்.
செம்மொழி சிறப்பை உணர்த்தும் வகையில் 11ஆம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டிகள் நடத்தப்படும். 25 ஆம் ஆண்டு முதல் ஜூன் மூன்றாம் தேதி செம்மொழி நாளாக கொண்டாடப்படும்.
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடத்தப்படும் இந்த போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசு தொகையாக ரூ. 1.88 என தெரிவித்துள்ளார்.
English Summary
June 3 will be Semmozhi Day Minister Saminathan