அடக்கடவுளே! தகராறில் ஈடுபட்ட காவல் ஏட்டை சஸ்பெண்ட் செய்ய பரிந்துரைத்த கோட்டார்...!
judge recommended suspending police officer involved dispute
தூத்துக்குடி வல்லநாடு சென்னல்பட்டி தெற்கு தெருவை சேர்ந்த 33 வயதான அருணாச்சலம் என்பவர், நெல்லை டவுன் காவல் நிலையத்தில் காவல் ஏட்டாக இருக்கிறார்.கொல்லங்கோடு காவல் நிலையத்தில் இவர் மீது வன்கொடுமை பிரிவு உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்கு இருக்கிறது.

இதற்காக அருணாச்சலம் நாகர்கோவில் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 5 -வது மாடியில் செயல்படும் பட்டியல் ஜாதியினர், பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமை சட்டம்) சிறப்பு அமர்வு நீதிமன்றத்திற்கு வந்தார். அங்கு வழக்கறிஞர் அமர வைத்திருந்த நாற்காலியில் அருணாச்சலம் அமர்ந்துள்ளார்.
இதனைக் கண்ட வழக்கறிஞர்கள் அங்கு அமரக்கூடாது என்றனர். இதையடுத்து அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பெரிதாகியுள்ளது.அப்போது நீதிமன்ற அலுவலர், அருணாச்சலத்திடம் அமைதி காக்குமாறு தெரிவித்துள்ளார். அவரிடமும் அருணாச்சலம் வாக்குவாதம் செய்ய,அங்கு வந்த கோட்டார், அருணாச்சலத்தை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இதுகுறித்து சிறப்பு நீதிமன்ற சிரஸ்தார் சிபு, கோட்டார் காவலில் புகார் அளித்தனர்.அதன் பேரில், அருணாச்சலத்தின் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்ஸ்பெக்டர் அருள் பிரகாஷ் தலைமையிலான போலீசார் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அருணாச்சலத்தை கைது செய்த காவலர்கள் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அருணாச்சலம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது குறித்து நெல்லை மாவட்ட காவல் சூப்பிரண்டுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் மீது துறை வாரியான நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும், அருணாச்சலத்தை சஸ்பெண்ட் செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
English Summary
judge recommended suspending police officer involved dispute