சென்னையில், ஜே.பி நட்ட தலைமையில் ஆலோசனைக் கூட்டம்.!! - Seithipunal
Seithipunal


பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்ட சென்னை தாம்பரத்தில் உள்ள ஒரு தனியாா் பல்கலைக்கழக நிறுவனத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னைக்கு வருகை தந்துள்ளார். இதற்காக நேற்று இரவு சென்னை வந்த அவரை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன் உள்பட பலர் வரவேற்றனர்.

இந்த நிலையில் இன்று சென்னையில் தமிழக பாஜக மாநில மையக்குழு கூட்டம் நடைபெற்றது. பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அவர்கள் முன்னிலையில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பாஜக மாநில மேலிட இணை பொறுப்பாளர் பி.சுதாகர் ரெட்டி, பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன், முன்னாள் மாநில கவர்னரும், பாஜக மாநில தலைவரும் தமிழச்சி சவுந்தரராஜன் மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

இந்த கூட்டத்தில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி உருவானதைத் தொடா்ந்து கூட்டணியை விரிவாக்கம் செய்து பலப்படுத்துதல், கூட்டணி கட்சி நிா்வாகிகளிடம் ஒற்றுமையை ஏற்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாகவும், பா.ஜ.க.வினர் மற்றும் கூட்டணிக் கட்சிகளை அரவணைத்துச் செல்வது தொடா்பாக ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

ஜே .பி நட்டாவின் வருகையை முன்னிட்டு பாஜகவின் முக்கிய நிா்வாகிகள் சென்னையில் தங்கி இருக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைமை அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

jp natta holding meeting with bjp leaders in chennai


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->