முக ஸ்டாலின் டெல்லிக்கு போயிட்டு அத மட்டும் தான் செய்யமுடியும்!! தமிழக அமைச்சர் பரபரப்பு பேச்சு!! - Seithipunal
Seithipunal



தமிழர் தந்தை என போற்றப்படும் சி.பா.ஆதித்தனாரின் 38-வது நினைவுதினத்தையடுத்து , எழும்பூரில் அமைந்துள்ள அவரது சிலைக்கு தமிழக  மீன்வளத்துறை அமைச்சர்  ஜெயக்குமார் அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.

செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தின் தேர்தல் முடிவுகள் தற்போதைய அரசு தொடர வேண்டும் என்று மக்கள் எங்களுக்கு கொடுத்த அங்கீகரமாக தான் பார்க்கிறோம். ஆர்.கே நகரில் மாயை ஏற்படுத்தி பலகோடி ருபாய் செலவு செய்து வளைத்தது போல தமிழகத்தையும் வளைத்துவிடலாம் என நினைத்தார் டிடிவி, ஆனால் மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.

தமிழக மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாத நபராக தான் டிடிவி தினகரன் உள்ளார். நடந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் 9 தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. எனவே தேர்தல் முடிவுகளால் அ.தி.மு.க.வுக்கு எந்த பின்னடைவும் இல்லை. 2021-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வே மீண்டும் வெற்றி வாகைசூடும்.

எழுதி வைத்துக் கொள்ளுங்கள் இந்த தேர்தல் முடிவுக்கு பின்னர் தமிழகத்தில் திமுக ஆட்சி மலரும் என்று துரைமுருகனும், மு.க.ஸ்டாலினும் கூறினார். அப்படி நடக்கவில்லை என்றால் எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்ய மு.க.ஸ்டாலின் தயாரா... என்று நான் சவால் விட்டிருந்தேன்.  தற்போது அவர்கள் ராஜினாமா செய்ய தயாரா? என கேள்வி எழுப்பினார்.

மேலும், தமிழக சட்டசபையில் வெளிநடப்பு செய்வது தான் அவர்களது வாடிக்கையாகிவிட்டது. எனவே  நாடாளுமன்றத்திற்கு சென்று சட்டை, பனியனை கிழித்து வராமல் இருந்தால் நல்லது. திமுக தமிழகத்தில் வெற்றிபெற்றது, "முதலையிடம் தேங்காய் இருந்தால், அது சமையலுக்கும் பயன்படாது. சாமிக்கும் பயன்படாது" என்ற நிலைமையில் திமுக உள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jeyakumar talk about stalin


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->