சத்துணவு ஊழியரிடம் அத்துமீற முயன்ற வாலிபர்! அடுத்த நடந்த திருப்பம்...? - காவலர்கள் வலையில் சிக்கிய குற்றவாளி
Youth Attempts Assault Noon Meal Worker Unexpected Twist That Followed Culprit Caught Police Net
தூத்துக்குடி மாவட்டம் பகுதியில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. சிறுநாடார்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய பெண் ஒருவர், மாதவன்குறிச்சி சத்துணவு மையத்தில் சமையலராக பணியாற்றி வருகிறார்.
கடந்த 25-ஆம் தேதி மாலை, விறகு சேகரிக்க சிறுநாடார்குடியிருப்பு-பெரியபுரம் பிரிவு சாலையில் உள்ள கோயில் அருகே நடந்து சென்றபோது எதிர்பாராத விபரீதம் நிகழ்ந்தது.

அந்த நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர், வழி கேட்பது போல நெருங்கி, திடீரென அந்தப் பெண்ணிடம் அத்துமீற முயன்றுள்ளார். ஆனால் தைரியமாக எதிர்த்துப் போராடிய அந்தப் பெண், அவரது பிடியிலிருந்து தப்பித்து ஓடிச் சென்று உயிர் தப்பினார்.
இதற்கிடையில், அவர் அணிந்திருந்த நகையை தங்கச் செயின் என தவறாக எண்ணிய குற்றவாளி, அதை பறித்துக் கொண்டு தப்பியோடியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், குலசேகரன்பட்டினம் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை தீவிரமாக ஆய்வு செய்தனர்.
இந்த விசாரணையில், பள்ளிபத்தைச் சேர்ந்த 28 வயதான யோகேஸ்வரன் என்பவர் இந்த செயலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து காவலர்கள் அதிரடி நடவடிக்கை எடுத்து யோகேஸ்வரனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.
English Summary
Youth Attempts Assault Noon Meal Worker Unexpected Twist That Followed Culprit Caught Police Net