மதுரையில் அதிர்ச்சி...! மனைவியின் சடலத்தை எரித்து சாம்பலாக்கிய வாலிபர்...! காவலர்களிடம் சிக்கியது எப்படி...? - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டம் மேலூர் அருகே நடைபெற்ற கொடூரக் கொலைச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனைவியின் நடத்தை மீது சந்தேகம் கொண்டதாகக் கூறப்படும் கணவர், அவரைக் கொலை செய்து உடலை எரித்து, சாம்பலை விவசாயக் கிணற்றில் கரைத்ததாக பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள கொட்டகுடி கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் (30), கார்த்திகா (24) என்பவரை திருமணம் செய்து கொண்டிருந்தார்.

இந்த தம்பதிக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது.கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு மற்றும் கருத்து வேறுபாடு காரணமாக, கார்த்திகா தனது தாயார் வீட்டான உறங்கான்பட்டி அருகேயுள்ள அ.கோவில்பட்டியில் வசித்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களது குழந்தையை பிரபாகரன் பராமரித்து வந்த நிலையில், குழந்தையை தன்னிடம் ஒப்படைக்குமாறு கார்த்திகா அடிக்கடி வலியுறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.இதற்கிடையில், மனைவியின் நடத்தை மீது சந்தேகம் கொண்டிருந்த பிரபாகரன், அவ்வப்போது அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தனது மனைவியை கொலை செய்துவிட்டதாக கொட்டகுடி கிராம நிர்வாக அலுவலர் செல்லத்திடம் பிரபாகரன் நேரில் சென்று தெரிவித்ததையடுத்து பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் உடனடியாக மேலூர் காவலர்களுக்கு தகவல் அளித்தார்.

இந்தச் சம்பவ இடத்திற்கு விரைந்த காவலர்கள், பிரபாகரனை காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர்.இந்த விசாரணையின்போது, கடந்த 3-ஆம் தேதி கார்த்திகாவை சந்திப்பதற்காக அழைத்துச் சென்று, ஊருக்கு வெளியே உள்ள தனிமையான பகுதியில் கொலை செய்ததாகவும், பின்னர் உடலின் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு, எஞ்சிய சாம்பலை அருகிலிருந்த விவசாயக் கிணற்றில் கரைத்ததாகவும் பிரபாகரன் வாக்குமூலம் அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபாகரன் அளித்த தகவலின் அடிப்படையில், உடல் எரிக்கப்பட்டதாகக் கூறப்படும் இடத்தையும், சாம்பல் கரைக்கப்பட்டதாகக் கூறப்படும் கிணற்றையும் காவலர்களுக்கு அவர் அடையாளம் காட்டினார்.இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, சம்பவ இடத்தில் இருந்து சாம்பல், மண் மாதிரிகள் மற்றும் பிற தடயங்கள் சேகரிக்கப்பட்டன.இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக பிரபாகரனின் நண்பர்களான கரண் மற்றும் சாந்தகுமார் ஆகியோரிடமும் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தக் கொலையில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா, குற்றம் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டதா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Shock Madurai young man burned his wife body ashes How he caught by police


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->