சமைக்கும் முன் கவனம்! போலி பனீரை வீட்டிலேயே எளிய முறையில் வேறு வேறு சோதனைகளால் கண்டறியலாம்...!
Be careful before cooking You can easily detect fake paneer at home using different tests
அண்மை காலங்களில் உணவு பாதுகாப்பும் உடல்நல கவனிப்பும் மக்களின் வாழ்வில் முக்கிய இடத்தை பிடித்துள்ளன. குறிப்பாக உடல் எடையை கட்டுப்படுத்தவும், தசை வளர்ச்சியை அதிகரிக்கவும் புரதச்சத்து நிறைந்த உணவுகள் அதிகமாக தேடப்படுகின்றன. அசைவ உணவுகளில் சிக்கன், முட்டை போன்றவை முக்கிய புரத ஆதாரங்களாக இருக்கும் போது, சைவ உணவாளர்களுக்கு பனீர் மற்றும் சோயா போன்றவை அவசியமான தேர்வுகளாகும்.

ஆனால் இந்த ஆரோக்கியமான தேர்வாக கருதப்படும் பனீரே இன்று சந்தையில் கலப்படத்தின் பிடியில் சிக்கி இருப்பது கவலைக்குரியது.குஜராத் மாநிலம் சூரத் நகரில் நடந்த சமீபத்திய சோதனையில், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பாமாயில் மற்றும் அசிடிக் அமிலம் பயன்படுத்தி போலி பனீர் தயாரித்த தொழிற்சாலையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தனர்.
விற்பனைக்கு தயாராக இருந்த சுமார் 3 லட்ச ரூபாய் மதிப்புள்ள கலப்பட பனீர் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம், பொதுமக்களின் மனதில் அதிர்ச்சியையும் உணவு பாதுகாப்பு குறித்து பெரும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது.இந்த போலி பனீர் தயாரிப்பின் பின்னணி மிகவும் கவலைக்குரியது.
இயற்கையான பாலின் பதிலாக ஹைட்ரஜனேட்டட் கொழுப்பு (பாமாயில், சூரியகாந்தி எண்ணெய் போன்றவை) பயன்படுத்தப்படுவதுடன், பனீரை கெட்டியாக காட்ட சோளம் அல்லது அரிசி மாவு சேர்க்கப்படுகிறது. மேலும் சில வேளைகளில் பசை போன்ற வேதிப்பொருட்களும் கலந்து, “அனலாக் பனீர்” என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது.
இவ்வாறான அனலாக் பனீர் உடலுக்கு ஒரு மெல்லிய விஷமாக மாறக்கூடும். அதிகப்படியான கொழுப்பு மற்றும் மாவுச்சத்து காரணமாக இதய நோய், நீரிழிவு போன்ற பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு இது கூடுதல் ஆபத்தை உருவாக்கும்.ஆனால் பயப்பட வேண்டாம்,வீட்டிலேயே சில எளிய முறைகள் மூலம் போலி பனீரை கண்டறியலாம். உண்மையான பனீர் மென்மையாக உடைந்து, பால் மணம் வீசும். அதற்கு மாறாக ரப்பர் போல் கடினமாக இருந்தால் சந்தேகிக்கலாம்.
அயோடின் சோதனையில், கொதிக்க வைத்த பனீரில் அயோடின் சேர்த்தபோது நீல நிறம் ஏற்பட்டால் அது கலப்படத்தைக் குறிக்கலாம். மேலும், துவரம் பருப்பு சோதனையில் நிறம் மாறினால், யூரியா கலப்பு இருக்கலாம் என்பதற்கான சிக்னல்.இதனைவிட எளிய பாதுகாப்பு வழி, வாங்கும் போது லேபிளை கவனமாக வாசிக்க வேண்டும்.
பொருட்களின் பட்டியல், ஸ்டார்ச் சேர்க்கை போன்ற தகவல்களை சரிபார்த்து, சந்தேகமானவற்றை தவிர்க்க வேண்டும். லேபிள் இல்லாமல் விற்கப்படும் பனீரை வாங்குவது மிகப்பெரிய ஆபத்து.மேலும், தரநிலை சான்று (FSSAI) கொண்ட பனீரை மட்டுமே தேர்வு செய்வது பாதுகாப்பான நடைமுறையாகும்.
வாங்கும் இடத்தின் சுத்தம், சேமிப்பு முறை, தயாரிப்பு தேதி போன்றவற்றையும் கவனிப்பது அவசியம்.சிறிய கவனக்குறைவால் பெரிய உடல்நல பிரச்சனைகள் உருவாகலாம். எனவே விழிப்புணர்வுடன் செயல்பட்டு, நம்மையும் நம் குடும்பத்தையும் போலி பனீரின் மறைமுக ஆபத்திலிருந்து பாதுகாப்போம்.
English Summary
Be careful before cooking You can easily detect fake paneer at home using different tests