பிரதமர் புதுச்சேரி வருகை அறிவிப்பு அதிரடி..! மீண்டும் என்.டி.ஏ ஆட்சி உறுதி...! - நரேந்திர மோடி
Prime Minister Visit to Puducherry Announced Major Development NDA Rule Confirmed Once Again Narendra Modi
புதுச்சேரி அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணிகள் தீவிரமடைந்துள்ளன. கடந்த மார்ச் 16-ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல், 23-ஆம் தேதி நிறைவடைந்ததுடன், 24-ஆம் தேதி மனுக்கள் தீவிர பரிசீலனைக்குட்பட்டன.

இதற்கிடையில், தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) அனைத்து 30 தொகுதிகளிலும் களமிறங்கும் வேட்பாளர்களின் முழுப் பட்டியலை வெளியிட்டு அரசியல் போட்டியை மேலும் சூடுபடுத்தியுள்ளது.
இந்த சூழலில், நரேந்திர மோடி வரும் மார்ச் 30-ஆம் தேதி புதுச்சேரிக்கு வருகிறார் என்ற தகவல் அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அவர் தனது ‘X’ சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கடந்த ஐந்து ஆண்டுகளில் இரட்டை இன்ஜின் என்.டி.ஏ. அரசு புதுச்சேரி மக்களின் ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளது.
இதனால் மீண்டும் என்.டி.ஏ. அரசை மக்கள் தேர்வு செய்வார்கள் என்ற உறுதி உள்ளது” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும், “'எனது வாக்குச்சாவடி வலிமையான வாக்குச்சாவடி' எனும் நிகழ்ச்சியில் மார்ச் 30 மாலை 5:30 மணிக்கு கலந்துகொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Prime Minister Visit to Puducherry Announced Major Development NDA Rule Confirmed Once Again Narendra Modi