தேர்தலை முன்னிட்டு பரபரப்பு! டி.டி.வி. தினகரன் வேட்பாளர் பட்டியல் வெளியீடு...! - 3 திமுக அமைச்சர்கள் தொகுதிகளில் நேரடி மோதல்
Election Fever Mounts TTV Dhinakaran Releases Candidate List Direct Clashes Constituencies Held by 3 DMK Ministers
தமிழ்நாடு அரசியல் அரங்கம் சூடுபிடித்துள்ள நிலையில், வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் கடும் நான்கு முனைப்போட்டி உருவாகியுள்ளது.
பிரதான எதிர்க்கட்சியான அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான கூட்டணி, 234 தொகுதிகளிலும் முழு வீச்சில் களம் இறங்கி அரசியல் வியூகத்தை தீவிரப்படுத்தியுள்ளது.

இதில் அ.தி.மு.க. 167 தொகுதிகள், பாரதிய ஜனதா கட்சி 26, பட்டாளி மக்கள் கட்சி 18, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் 11 உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் பலத்த போட்டியை உருவாக்குகின்றன.
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில், அ.ம.மு.க.க்கு முக்கியமான 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அந்த இடங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று சென்னையில் அதிரடியாக வெளியிட்டார்.
நாங்குநேரி முதல் திருப்பத்தூர் வரை பரவியுள்ள இந்த பட்டியல், கூட்டணிக்குள் புதிய அரசியல் சமநிலையை உருவாக்கும் வகையில் அமைந்துள்ளது.மேலும், வேட்பாளர் அறிவிப்புடன் சேர்த்து தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டுள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், வாக்காளர்களை கவரும் வாக்குறுதிகளால் அரசியல் சூட்டை மேலும் அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், ஆட்சியில் உள்ள திராவிட முன்னேற்றக் கழகம் அமைச்சர்கள் பதவி வகிக்கும் முக்கிய தொகுதிகளான சைதாப்பேட்டை, மன்னார்குடி, திருச்சி மேற்கு ஆகிய இடங்களில் அ.ம.மு.க. நேரடி சவாலை விடுத்துள்ளது.
இத்தொகுதிகளில் தற்போது எம்.எல்.ஏக்களாக உள்ள மா. சுப்பிரமணியன், டி.ஆர்.பி. ராஜா, கே. என். நேரு ஆகியோருக்கு எதிராக அ.ம.மு.க. வேட்பாளர்கள் களம் இறங்குவது, அந்த தொகுதிகளில் கடும் அரசியல் மோதலை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Election Fever Mounts TTV Dhinakaran Releases Candidate List Direct Clashes Constituencies Held by 3 DMK Ministers