கன்னத்தில் அடிக்க வந்த ஜெயக்குமார்.. கையைப் பிடித்த நயினார் நாகேந்திரன்! நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற சிட்டி யூனியன் வங்கியின் 120ஆம் ஆண்டு விழாவில் சுவாரஸ்யமான காட்சி ஒன்று நிகழ்ந்தது. இந்த விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி. சண்முகம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

விழாவின் இடைவேளையில் நயினார் நாகேந்திரனும் ஜெயக்குமாரும் சிரித்தபடி உரையாடிக் கொண்டிருந்தனர். அப்போது ஜெயக்குமார், நயினார் நாகேந்திரனை செல்லமாக கன்னத்தில் அடிக்க முயன்றார். உடனே நயினார் நாகேந்திரன் அவரது கையைப் பிடித்து சிரித்தபடி எதிர்வினை அளித்தார். இரு கட்சி தலைவர்களின் இந்த நெருக்கமான காட்சி அங்கு இருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

அதிமுக – பாஜக கூட்டணி 2024 லோக்சபா தேர்தலை முன்னிட்டு முறிந்திருந்த நிலையில், 2026 சட்டசபை தேர்தலை கண்முன்னிட்டு மீண்டும் அமைந்துள்ளது. ஆனால், இரு கட்சிகளுக்குள் இன்னும் ஒருமித்த நிலை ஏற்படவில்லை என்றே கருதப்படுகிறது. இந்த சூழ்நிலையில், இரு கட்சி தலைவர்களும் அளவளாவிக் கொண்ட காட்சி அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

2001 முதல் 2006 வரை ஜெயலலிதா மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக பணியாற்றியவர் நயினார் நாகேந்திரன். 2017ல் அதிமுகவை விட்டு வெளியேறி பாஜகவில் இணைந்த அவர், தற்போது பாஜக மாநிலத் தலைவராக உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Jayakumar came to slap him on the cheek Nainar Nagendran held his hand What happened


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->