உலக நன்மைக்காக ராமேஸ்வரம் கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு செய்துள்ள ஜப்பான் பக்தர்கள்..!
Japanese devotees perform special puja and worship at Rameswaram temple for the benefit of the world
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் நேற்று ஜப்பான் பக்தர்கள் உலக நன்மைக்காக சிறப்பு பூஜை நடத்தி வழிபாடு செய்துள்ளனர். ஜப்பான் தலைநகர் டோக்கியோவை சேர்ந்த ஜப்பானிய சிவா ஆதீனம் பால கும்ப குரு முனியின் தலைமையில் அவர்களது சீடர்கள் 20 பேர், இந்தியாவில் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு இந்தியா வந்துள்ளனர்.
கடந்த 03 வாரங்களுக்கு முன்பு இந்திய வந்த இவர்கள் முதலில் புதுச்சேரியில் உள்ள பிரத்தியங்கிரா தேவி கோயிலில் உலக நன்மைக்காக பூஜை வழிபாடு நடத்தினர். அதனை தொடர்ந்து கும்பகோணம், பழநி ஆகிய பகுதிகளில் உள்ள முக்கிய கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தியதோடு, திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழாவிழலும் கலந்துகொண்டனர்.
-dg569.png)
பின்னர் நேற்று முன்தினம் ராமேஸ்வரம் சென்றுள்ளனர். அங்கு அவர்கள் அதிகாலையில் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடினர். அதன்பின் கோயில் உள்ளே உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, ராமநாதசுவாமி கோயில் எதிரே தனியார் மண்டபத்தில் கோயில் ருத்ரா ஹோம பூஜை செய்தனர்.
அதன் பின்னர், கோயில் உள்ளே விஸ்வரூப ஆஞ்சநேயர், ஆத்மலிங்கம், வல்லப விநாயகர், முருகர், நந்தீஸ்வரர் ஆகிய சன்னதிகளில் வழிபட்டனர். தொடர்ந்து, ராமநாதசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வணங்கி வழிப்பட்டதோடு, பர்வதவர்த்தினி அம்பாள், பள்ளி கொண்ட பெருமாள் சுவாமிகளை தரிசனம் செய்து உலகப் பிரசித்தி பெற்ற மூன்றாம் பிரகாரத்தை பார்வையிட்டனர்.
-sypsp.png)
இந்த ஆன்மீக பயணம் குறித்து ஜப்பானிய சிவா ஆதீனம் பால கும்ப குரு முனியின் கூறுகையில், ‘‘இந்து கோயில்களை வழிபடுவதில் மன அமைதியும், ஆன்மீக முன்னேற்றமும் ஏற்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இதேப்போல் சீடர்களுடன் இந்தியா வந்து இந்து கோயில்களில் வழிபாடு நடத்தி தரிசனம் செய்கிறோம். உலக அமைதி ஏற்பட்டு அனைவரிடத்திலும் ஆன்மிகம் வளர வேண்டும்’’ என்று குறிப்பிட்டார்.
English Summary
Japanese devotees perform special puja and worship at Rameswaram temple for the benefit of the world