நீங்கமட்டுதான் நூற்றாண்டு விழா கொண்டாடுவீங்களா நாங்களும் கொண்டாடுவோம்! ஜானகி ராமச்சந்திரன் நூற்றாண்டு விழா: 24-ல் நடைபெறுவதாக பழனிசாமி அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


சென்னை: முன்னாள் முதல்வர் ஜானகி ராமச்சந்திரனின் நூற்றாண்டு விழா, அதிமுக சார்பில் எதிர்வரும் நவம்பர் 24-ம் தேதி, சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

விழாவில் ஜானகி ராமச்சந்திரனின் நினைவுகளைப் பெருமைப்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இவற்றில் படம் திறப்பு, மலர் வெளியீடு, கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம், கலை நிகழ்ச்சி போன்றவை இடம் பெறுகின்றன.

நிகழ்வின் சிறப்பை மேம்படுத்த முன்னாள் அமைச்சர்கள் சி.பொன்னையன், சி.விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், வைகைசெல்வன் மற்றும் திரைப்பட இயக்குநர் ஆர்.வி.உதயகுமாரைக் கொண்ட ஏற்பாட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. 

அதிமுக தொண்டர்கள், கழக நிர்வாகிகள், கலைஞர்கள், மற்றும் பொதுமக்கள் அனைவரும் நிகழ்ச்சியில் பங்கேற்று, ஜானகி ராமச்சந்திரனின் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Janaki Ramachandran Centenary Celebration Palaniswami announced that it will be held on the 24th


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->