ஜல்லிகட்டு காளை மோதி உரிமையாளர் பலி.. சூரியூர் ஜல்லிகட்டில் நடந்த சோகம்..! - Seithipunal
Seithipunal


ஜல்லிகட்டு காளை மோதி உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழரின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு தமிழகத்தின் பல இடங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில், திருச்சி மாவட்டம் , சூரியூரில்  ஜல்லிகட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் மீனாட்சி சுந்தரம் என்பவர் தனது காளையை ஜல்லிகட்டில் பங்கேற்க கொண்டுவந்தார்.

வாடிவாசலில் காளையை அவிழ்து கொண்டு நின்ற போது எதிர்பாராத விதமாக காளை மிரண்டு  மீனாட்சி சுந்தரத்தின் வயிறு, தொடையில் குத்தியது.  இதில், படுகாயமடைந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால், அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jallikattu bull collision kills owner


கருத்துக் கணிப்பு

இன்று வெளியான விருமன் திரைப்படம் எப்படி இருக்கிறது?Advertisement

கருத்துக் கணிப்பு

இன்று வெளியான விருமன் திரைப்படம் எப்படி இருக்கிறது?
Seithipunal