அம்மாவோட முதல் வீடு... பொய்யுரைத்த இ.பி.எஸ்.. கொந்தளிக்கும் ஜெ.தீபா..!! - Seithipunal
Seithipunal


மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்து வந்த வேதா இல்லத்தினை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு தமிழக அரசு முயற்சி செய்து வந்தது. இதன்படி, ரூ.67.90 கோடியை நீதிமன்றத்தில் அரசு செலுத்தியுள்ளது. இந்த நிலையில், ஜெயலலிதாவின் இல்லத்தினை அரசுடைமையாக்கும் நடவடிக்கைக்கு, ஜெ.தீபா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

இந்த விஷயம் தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்த சமயத்தில், உங்களிடம் அதிகாரம் இருந்தால் எந்த சொத்தையும் எடுத்துக்கொள்ளலாமா?.. வேதா இல்லம் எங்களின் பூர்வீக சொத்தாகும். வேதா இல்லத்தின் ஒவ்வொரு செங்கல்லும் அம்மாவின் ஆன்மாவால், உணர்வால் நிறைந்துள்ளது. தன்னுடைய 39 வயதிலேயே அரசியலுக்கு வந்தவர். அரசியலுக்கு முன்பாக குடும்ப உறவினர்களின் வாழ்க்கை, அவரது வாழ்க்கையாக அமைந்தது.

அந்த இல்லத்திற்கான போராட்டம் உடமைக்காகவோ அல்லது விலைமதிப்புள்ள பொருட்கள் என்பதற்காகவோ அல்ல.. அது எங்கள் பூர்வீக சொத்து. எங்களின் உரிமையை நாங்கள் கேட்கிறோம். வேதா இல்லத்தினை நியாயமான முறையில் எங்களிடம் கேட்டிருப்பின், நாங்களே அரசின் முடிவிற்கு ஒத்துழைத்து இருப்போம். ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக 4 அணியாக உடைந்து இருந்தது. 

அப்போது எனது ஆதரவினை எதிர்பார்த்து ஓ.பன்னீர் செல்வம் வந்திருடன்ஹார். அவர், வேதா இல்லம் தொடர்பாக கவலை வேண்டாம். அதனை நல்ல முறையில் மீட்டுத்தருவோம் என்று கூறினார். அவரது ஆதரவாளர்களும் இதனையே தெரிவித்தனர். இப்போது வேதா இல்லத்தை அரசுடைமையாக்கும் நடவடிக்கை எப்படிப்பட்டது?.

இந்த விஷயத்தில் அரசியல் கண்ணோட்டம் என்பது அதிகளவு இருக்கிறது. வேதா இல்லத்தை மீட்கும் முயற்சி ஈடுபட்ட போதிலும், பணத்திற்காகவோ அல்லது பொருளுக்காகவோ நாங்கள் போராடவில்லை. பூர்வீக சொத்துக்கள் பாதிக்கப்பட வேண்டும், உரிமைகள் மீட்டெடுக்க வேண்டும் என்பதே எங்களின் குறிக்கோள். 

ஜெயலலிதா நடித்து மிகவும் கஷ்டப்பட்டு வாங்கியது வேதா இல்லம். அது அவரின் முதல் சொத்தும் ஆகும். இதனால் வேதா இல்லத்தை விட்டுக்கொடுக்க இயலாது என்று போராடி வருகிறோம். இதனை சட்டரீதியாக நாங்கள் எதிர்கொள்வோம். 

வேதா இல்லத்தை அரசு காயப்படுத்தும் முயற்சியில் எங்களுக்கு துளியும் விருப்பம் இல்லை. இதனை சட்டப்படியான முறையில், வாரிசு என்ற அடிப்படையில் நாங்கள் எதிர்கொள்வோம். போயஸ் இல்ல வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், வாரிசை கேட்காமல் எப்படி மதிப்பீடு செய்ய இயலும்?.. உச்சநீதிமன்றத்திற்கு நாங்கள் செல்வோம். எங்களின் சொத்து எங்களுக்கு விட்டுத்தரப்பட வேண்டும். இதுவே நியாயம் என்று கூறினார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

J Deepa got angry about Jayalalithaa house occupy by TN govt


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->