விஜய் பெயரில் அத்துமீறலா...? விடாத காவல்துறை...! - நடுரோட்டில் கார் ஸ்டண்ட் செய்த தவெகவினர் 6 பேர் சிறையில் அடைப்பு...!
it violation name Vijay police did not let go 6 people who did car stunt middle road were imprisoned
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அபாரமான வெற்றியைப் பதிவு செய்து அரசியல் அரங்கில் புதிய அத்தியாயத்தைத் திறந்துள்ளார்.
மொத்தம் 234 தொகுதிகள் கொண்ட அவையில் ஆட்சியை அமைக்க 118 இடங்கள் அவசியமாக இருந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று மிகப்பெரிய தனிக்கட்சியாக திகழ்கிறது.

தி.மு.க., அ.தி.மு.க. போன்ற பாரம்பரிய அரசியல் வலிமைகளை பின்னுக்கு தள்ளி வைத்து, தமிழக அரசியல் வரலாற்றை மாற்றியமைத்துள்ள விஜய் விரைவில் முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார் என எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
இந்த மாபெரும் வெற்றியை கொண்டாடும் விதமாக, தவெக தொண்டர்கள் இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில், ராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் கொட்டும் மழையைப் பொருட்படுத்தாமல், காரில் தவெகக் கொடியுடன் விசில் அடித்து ஆர்ப்பரித்து, ஆபத்தான சாகசங்களில் ஈடுபட்டு சிலர் பரபரப்பை ஏற்படுத்தினர்.
இந்த நடவடிக்கைகள் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாகக் கருதப்பட்ட நிலையில், ரகளையில் ஈடுபட்ட 6 பேரை காவலர்கள் கைது செய்து, அவர்கள் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.
English Summary
it violation name Vijay police did not let go 6 people who did car stunt middle road were imprisoned