அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர் செந்தில் கார்த்திகேயன் வீட்டிலும் ஐடி ரெய்டு..!!
IT raid on Minister Senthil Balaji friend Senthil Karthikeyan house
திமுக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்கள் மற்றும் உறவினர்கள் வீடு, ஒப்பந்ததார்கள் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கோவை மாவட்டம் கோல்டு வின்ஸ் பகுதியில் உள்ள செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர் செந்தில் கார்த்திகேயன் என்பவர் வீடு மற்றும் அலுவலகங்களில் 10 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் இரு குழுக்களா பிரிந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

செந்தில் கார்த்திகேயன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து நிலையில் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியின் தீவிர ஆதரவாளராக செயல்பட்டு வருகிறார். அதிமுக எம்ஜிஆர் இளைஞர் அணியின் கோவை வடக்கு மாவட்ட செயலாளராக இருந்த செந்தில் கார்த்திகேயன் கடந்தாண்டு அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதரவோடு முதல்வர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி மீது எதிர்க்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து தமிழக ஆளுநர் ரவியிடம் புகார் அளித்த நிலையில் இந்த வருமான வரித்துறை சோதனையானது நடைபெற்று வருகிறது. தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு முறை பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு சென்றுள்ள நிலையில் இந்த வருமான வரித்துறை சோதனையானது நடைபெறுவது திமுகவினர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
IT raid on Minister Senthil Balaji friend Senthil Karthikeyan house