சைவ சமயத்துறவி' திரு.ஞானியார் அடிகள் அவர்கள் பிறந்ததினம்!.
It is the birthday of Saiva Samayatthiravi Thiru Gnaniyar Adigal
'மதுரைத் தமிழ்ச்சங்கம் தோன்றுவதற்கு முதன்மைக் காரணமாக இருந்த 'சைவ சமயத்துறவி' திரு.ஞானியார் அடிகள் அவர்கள் பிறந்ததினம்!.
ஞானியார் அடிகள் எனப்படும் ஸ்ரீலஸ்ரீ சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள் (பிறப்பு : பழநியாண்டி, மே 17, 1873 - ஆகஸ்ட் 2, 1942 ) என்பவர் இந்தியாவின், தமிழ்நாட்டின் திருக்கோவலூர் ஆதீனம் திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் மடாலயத்தில் ஐந்தாவது மடாதிபதி ஆவார். இவர் தமிழிலும், வடமொழியிலும் புலமை கொண்டவரும், ஆங்கிலம், தெலுங்கு ஆகிய மொழிகளை நன்கு அறிந்தவராகவரும் ஆவார்.
இவர் சைவ மறுமலர்ச்சிக்கு உழைத்த துறவி, பேச்சாளர், உரையாசிரியர். மதுரைத் தமிழ்ச்சங்கம் தோன்றுவதற்கு முதன்மைக் காரணமாக இருந்தவர். தமிழிலும், வடமொழியிலும் பெரும் தேர்ச்சிக் கொண்டவர். தமிழையும் சைவத்தையும் ஒன்றாக எண்ணிய இவர் சைவசித்தாந்த பெருமன்றம், வாணிவிலாச சபை போன்ற அமைப்புகளை உருவாக்கினார். இவர் திருக்கோவிலூர் மடத்தின் தலைவராகவும் இருந்தார்.
காங்கிரசை விட்டு விலகி சுயமரியாதை இயக்கம் தொடங்கிய பெரியார் பகுத்தறிவுப் பிரச்சாரத்துக்காக குடிஅரசு இதழ் அலுவலகத்தைத் திறந்து வைக்க ஞானியாரடிகளை அழைத்தார். அங்கு சென்ற ஞானியாரடிகள் அலுவலகத்தைத் திறந்தவைத்து வாழ்த்துரை வழங்கினார்.
1938ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் இந்தி கட்டாயமாக்கப்பட்ட போது, அடிகளார் இந்தியை எதிர்த்து அறிக்கை வெளியிட்டார்.
English Summary
It is the birthday of Saiva Samayatthiravi Thiru Gnaniyar Adigal