திரு.காயிதே மில்லத் அவர்கள் பிறந்ததினம்!. - Seithipunal
Seithipunal


கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் என்று போற்றப்படும்திரு.முகம்மது இஸ்மாயில் அவர்கள் பிறந்ததினம்!.

கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் (Quaid-e-Millat) என்று போற்றப்படும் இந்திய முஸ்லீம் தலைவர்களுள் ஒருவரான முகம்மது இஸ்மாயில் 1896ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி திருநெல்வேலியில் பிறந்தார்.

 இவர் மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொள்வதற்காக படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டார்.

 மேலும், இவர் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவராகவும், சட்ட சபை உறுப்பினராகவும் (1946-52), டெல்லி மேலவை உறுப்பினராகவும் (1952-58), நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும் (1962,1967,1971) பதவி வகித்துள்ளார்.

 மக்களுக்கு வழிகாட்டும் தலைவரான இஸ்மாயில் தனது 75வது வயதில் 1972 ஏப்ரல் 5 ஆம் தேதி அன்று மறைந்தார். இவரின் மறைவுக்குப்பின் தமிழக அரசு நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு காயிதே மில்லத் நாகைப்பட்டினம் மாவட்டம் (Nagai Quaid-E-Millet) என்று பெயர் சூட்டியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

It is the birthday of Mr Kaidh Milath


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->