ஆர்.சி.பி-இன் வெற்றிக்கொண்டாட்டத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவம்: கர்நாடக முதல்வரின் அரசியல் செயலாளர் பணிநீக்கம்..!
Karnataka Chief Ministers political secretary dismissed after 11 people died
கடந்த 04 ஆம் தேதி கர்நாடகா பெங்களூருவில் ஆர்.சி.பி அணி பிரிமீயர் லீக் கிரிக்கெட் தொடரில் சாம்பியன் கோப்பையை வென்றதை தொடர்ந்து சின்னசாமி ஸ்டேடியத்தில் பேரணி நடந்த நிலையில், கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான சம்பவத்தில் உளவுத்துறை ஏ.டி.ஜி.பி., அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். அத்துடன், முதல்வரின் அரசியல் செயலாளர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.
பேரணியில் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்ய, போலீஸ் கமிஷனர் தயானந்தா உள்ளிட்டோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதோடு, பெங்களூரு அணி நிர்வாகி உள்ளிட்ட 04 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந் நிலையில், அதிரடி நடவடிக்கையாக அம்மாநில உளவுத்துறை ஏ.டி.ஜி.பி., தலைவர் ஹேமந்த் நிம்பல்கர் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு புதிய பொறுப்புகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், இதே போன்று முதல்வர் சித்தராமையாவின் அரசியல் செயலாளர் கோவிந்தராஜ் அவர்களும் பணி நீக்கப்பட்டுள்ளார்.
மாநில ஒலிம்பிக் சங்க தலைவராகவும் இருக்கும் இவர் வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வை நடத்த வேண்டும் என்று முதல்வருக்கு அதிக அழுத்தம் கொடுத்தவர் என்று கூறப்படுகிறது.
English Summary
Karnataka Chief Ministers political secretary dismissed after 11 people died