அரசியல் மற்றும் திரையுலகை உலுக்கிய விவகாரம்...! - முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் திடீர் ஒத்திவைப்பு...! - Seithipunal
Seithipunal


தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள முதல்-அமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா தொடர்பான விவாகரத்து வழக்கின் விசாரணை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.கணவன்-மனைவி இடையே ஏற்பட்டதாக தெரிவிக்கப்படும் கருத்து முரண்பாடுகளைத் தொடர்ந்து, திருமண பந்தத்தை சட்டப்பூர்வமாக முடிவுக்கு கொண்டு வரக் கோரி சங்கீதா, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளின் அடிப்படையில் விவாகரத்து வழங்க வேண்டும் என்றும், ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார். மேலும், நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வசிப்பதற்கான உரிமையையும் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, விஜய் மற்றும் சங்கீதா இருவரும் நேரில் ஆஜராகவில்லை. அவர்களது தரப்பு வழக்கறிஞர்கள் மட்டுமே நீதிமன்றத்தில் முன்னிலையாகினர்.

இருவரும் பொதுமக்கள் மத்தியில் அதிக கவனம் பெற்ற நபர்கள் என்பதால், பாதுகாப்பு மற்றும் நடைமுறை வசதிகளை கருத்தில் கொண்டு காணொலி வாயிலாக ஆஜராக அனுமதி வழங்க வேண்டும் என இருதரப்பினரும் கோரிக்கை வைத்திருந்தனர்.இதையடுத்து வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஜூன் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

அதன்படி இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.அப்போது, காணொலி வாயிலாக ஆஜராக அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் ஏற்க மறுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், அதற்குத் தேவையான மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட நடைமுறை ஆவணங்களை முறையாக சமர்ப்பிக்குமாறும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், இன்றைய விசாரணையிலும் விஜய் மற்றும் சங்கீதா இருவரும் நேரில் முன்னிலையாகாத காரணத்தால், வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

பொதுமக்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களின் கவனத்தை ஈர்த்துள்ள இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை மீது தற்போது அதிக எதிர்பார்ப்பு நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

issue that rocked politics and film industry Chief Minister Vijay Sangeeta Divorce case sudden adjournment court


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->