விஜய் எது பண்ணாலும் தப்பா? எல்லாத்தையும் குறை சொன்னா எப்படி? பவுன்சர்கள் மேல எந்த தப்பும் இல்ல.. விஜய்க்கு ஆதரவாக பிரேமலதா! - Seithipunal
Seithipunal


தவெக தலைவர் விஜய் தலைமையில் மதுரை பாரபத்தியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டில் சுமார் 2 லட்சம் தொண்டர்கள் கூடினர். இந்த மாநாட்டில் விஜய், திமுக, பாஜக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளையும் தாக்கி பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால், அரசியல் உரைகள் ஒருபுறம் இருக்க, மாநாட்டில் பல அசம்பாவிதங்கள் நடந்தன.தவெக பேனர் கட்டிய கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.கொடிக்கம்பம் சாய்ந்து கார் மீது விழுந்ததால் வாகனம் நொறுங்கியது.கடும் வெயில் தாக்கத்தில் பல தொண்டர்கள் மயங்கி விழுந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.

இதற்கிடையில், மாநாட்டில் விஜயின் பவுன்சர்கள் நடந்து கொண்ட விதம் போலீஸ் புகாருக்கு வழிவகுத்துள்ளது.

விஜய், மேடையில் இருந்து தொண்டர்களை நோக்கி ராம்ப் வாக் மூலம் வந்தபோது, சில தொண்டர்கள் அருகில் சென்று பார்க்கும் ஆர்வத்தில் ராம்ப் மீது ஏறினர். அப்போது விஜயை பாதுகாப்பாக வைத்திருந்த பவுன்சர்கள், அவர்களை கட்டுப்படுத்த முயன்றனர்.

இதில், பெரம்பலூர் மாவட்டம் பெரியம்மாபாளையத்தைச் சேர்ந்த சரத்குமார் என்ற இளைஞர், பவுன்சர் ஒருவர் தன்னை தூக்கி வீசியதாகவும், இதனால் நெஞ்சில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் குற்றம்சாட்டி போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், விஜய் மீதும் பவுன்சர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கை திமுக அரசு வேண்டுமென்றே பதிவு செய்ததாக தவெக தொண்டர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மாறாக, திமுக மற்றும் பிற கட்சியினர், “விஜய் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்துகின்றனர்.

இந்தச் சூழலில், செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், பவுன்சர்களைத் தடுத்தார்.“தவெக மாநாட்டில் ஏற்பாடுகள் சரியாக செய்யப்பட்டிருந்தன. எல்லாவற்றையும் குறையாகக் காணக்கூடாது.இளைஞர்கள் ஆர்வக் கோளாறு காரணமாகவே ராம்ப் மீது ஏறினர். அங்கு இருந்த பவுன்சர்கள் அவர்களை கட்டுப்படுத்தும் நோக்கில் விலக்கினர்.யாரையும் வேண்டுமென்றே தள்ளவில்லை. தள்ளும்போது சிலர் கீழே விழுந்துள்ளனர்” என்று அவர் விளக்கம் அளித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Is whatever Vijay does wrong How can he criticize everything There is no fault with the bouncers Premalatha supports Vijay


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->