கைதாகிறாரா மாதம்பட்டி ரங்கராஜ்? இரண்டாம் திருமணம் சர்ச்சை! கணவரின் தில்லுமுல்லு வேலையால் ஆக்ஷன் எடுக்க ரெடியாகும் முதல் மனைவி..!
Is Madhampatti Rangaraj being arrested Second marriage controversy The first wife is ready to take action because of her husband fraudulent work
சமீப நாட்களாக சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் பெயராக மாதம்பட்டி ரங்கராஜ் திகழ்கிறார். இது அவரது இரண்டாவது திருமணத்தை சுற்றிய சர்ச்சையால் தான். நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவை திருமணம் செய்துகொண்டதாக புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதனையடுத்து, ஜாய் கிரிசில்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தாம் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தது, மேலும் அதே நேரத்தில் விரைவில் பெற்றோர் ஆக உள்ளதாகத் தெரிவித்தது பரபரப்பை அதிகரித்தது.
இந்த தகவல்களுக்கு பின்னால் மறைந்திருந்த உண்மை ஒன்று தற்போது வெளிச்சத்துக்குத் தோன்றியுள்ளது. மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி, அவருக்கு ஸ்ருதி என்ற மனைவியும், இரு மகன்களும் இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஸ்ருதி ஒரு வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் தனது கணவர் மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் எடுத்த குடும்ப புகைப்படத்தையும், “எனது மூன்று குழந்தைகள்” என அழகான பதிவையும் ஸ்ருதி பகிர்ந்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, ஜாய் கிரிசில்டா தனது திருமண புகைப்படத்தையும், கர்ப்பம் பற்றிய தகவல்களையும் வெளியிட்டதும், ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். “மாதம்பட்டி ரங்கராஜ் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்தாரா?” என்ற கேள்வி வலுப்பெற்றது. இது குறித்த எந்த விளக்கமும் அவர் தராததால், மேலும் பல கேள்விகள் எழுந்தன.
அண்மைய தகவல்படி, மாதம்பட்டி ரங்கராஜ் தன் முதல் மனைவியை முறையாக விவாகரத்து செய்யாமல் இரண்டாம் திருமணத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் தற்போது அவருக்கு சட்ட ரீதியான சிக்கல்கள் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. முதல் மனைவி ஸ்ருதியும், ஒரு சட்ட நிபுணராக இருப்பதால், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அவர் முனைந்து உள்ளதாகக் கூறப்படுகிறது. குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டால், திருமண சட்டங்களை மீறியதற்காக ரங்கராஜ் மீது வழக்கு தொடரப்படும் வாய்ப்பும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது இது தொடர்பான எந்த அறிக்கையும் மாதம்பட்டி ரங்கராஜ் தரவில்லை. அவரும் ஜாய் கிரிசில்டாவும் இந்த விவகாரம் குறித்து மெளனமாகவே உள்ளனர். இந்த விவகாரம் என்ன திசையில் நகரும் என்பது இன்னும் சில நாட்களில் தெரியவரும். சமூக வலைதளங்களில் இது குறித்த விவாதங்கள் தொடர்ந்து வெடிக்கின்றன.
English Summary
Is Madhampatti Rangaraj being arrested Second marriage controversy The first wife is ready to take action because of her husband fraudulent work