நான் தற்கொலை செய்ய காரணம் அவர்கள்தான்?" — மேலாளரின் பரபரப்பான கடிதம் சிக்கியது!
Is it because of them that I am contemplating suicide?The managers frantic letter got stuck
சென்னையில் உள்ள தனியார் பால் நிறுவன மேலாளர் ஒருவர் ரூ.45 கோடி மோசடி விவகாரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்குமுன் எழுதப்பட்ட கடிதம், நிறுவனத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளது.
நவீன் பஞ்சலால் (வயது 37), ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்தவர். சென்னையின் புழல் அருகே பிரிட்டானியா நகர், கதிர்வேடு பகுதியில் வசித்து வந்தார். கடந்த மூன்று ஆண்டுகளாக திருமலா பால் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தவர்.
வருடாந்திர கணக்கெடுப்பில், நவீன் ரூ.45 கோடி பணத்தை கையாடல் செய்ததைக் கண்டறிந்த நிறுவனம், கொளத்தூர் துணை கமிஷனர் பாண்டியராஜனிடம் புகார் அளித்தது.
போலீசார் நவீனை தொடர்புகொண்டபோது, அவர் "நாளை விசாரணைக்கு வருகிறேன், பணத்தை திருப்பிச் செலுத்துவேன்" என்று கூறியிருந்தார். ஆனால், அதற்குப் பின் புதிதாக கட்டப்பட்ட வளாகத்திலுள்ள குடிசையில், மின்விசிறியில் நைலான் கயிறால் தூக்கிட்டு தற்கொலை செய்தார்.
தற்கொலைக்குமுன் தனது சகோதரிக்கும், பால் நிறுவன அதிகாரிகளுக்கும் அனுப்பிய மின் அஞ்சலில் நவீன் பஞ்சலால் கூறியது:“நரேஷ் மற்றும் முகுந்த் என்கிற இருவரும் 'மோசடி பணத்தை கொடுத்தாலும் ஜெயிலில் போவே'ன் என மிரட்டினர்.”
“அச்சத்தாலும் மன அழுத்தத்தாலும் தற்கொலைக்கு முடிவுசெய்தேன்.”“இந்த மோசடியில் வேறு யாரும் தொடர்பில்லாது, பணம் முழுவதும் என் வசம்தான். ஏற்கனவே ₹5 கோடி திருப்பி செலுத்தியுள்ளேன்.”
“பாஸ்போர்ட், சொத்து ஆவணங்கள், காசோலைகள் அனைத்தையும் நிறுவனம் பறிமுதல் செய்துள்ளது. எந்த ஆதாரமும் தரவில்லை. ஒப்பந்தம் செய்வதற்கும் தயாராயிருந்தேன். ஆனாலும் அவர்கள் சித்ரவதை செய்தனர்.”“எனது சடலத்தை அலுவலக வாசலில் வையுங்கள். அதிலிருந்தே பணத்தை வசூலிக்கவும்.”
இந்த சம்பவம் தொடர்பாக புழல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சமூக வலைதளங்களில் துணை கமிஷனர் பாண்டியராஜனை குறித்தும் செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அருண், மேற்கு மண்டல இணை கமிஷனர் திஷா மிட்டலிடம், முழுமையான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.
சென்னை பெருநகர காவல்துறை செய்திக்குறிப்பில்,“நவீன் கடந்த மாதம் 25ம் தேதி புகார் அளித்திருந்தாலும், விசாரணை ஆரம்பிக்கப்படவில்லை,”“தற்கொலைக்குமுன் அனுப்பிய மின்னஞ்சலில், காவல்துறையினரை குற்றம் சாட்டவில்லை,” என தெரிவித்துள்ளது.
English Summary
Is it because of them that I am contemplating suicide?The managers frantic letter got stuck